பாய்ந்து வந்த நீரில் நீந்தி டிக் டாக்... பரிதாபமாக உயிரை விட்ட இளைஞர்..!

By vinoth kumarFirst Published Sep 23, 2019, 11:29 AM IST
Highlights

தெலங்கானாவில் டிக் டாக் வீடியோ எடுத்த இளைஞர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், இரண்டு நாட்களுக்கு பின் அவரது உடல் அழுகியநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

தெலங்கானாவில் டிக் டாக் வீடியோ எடுத்த இளைஞர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், இரண்டு நாட்களுக்கு பின் அவரது உடல் அழுகியநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

டிக் டாக் செயலியை தடை செய்யக் கோரி தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிர்ப்புக்குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்திலுள்ள பிரேம்கல் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை நண்பர்களுடன் அருகிலுள்ள கப்பலால் தடுப்பணைக்கு குளிக்கச் சென்றுள்ளார்.

முன்னதாக டிக் டாக் சமூக வலைதளத்தில் வெளியிடுவதற்காக 3 பேரும் தடுப்பணையில் இருந்து பாய்ந்து வரும் நீரில் நின்று வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென நீர்வரத்து அதிகரித்து மூன்று பேரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் இரண்டு பேர் பெரும் சிரமத்திற்கு இடையே நீந்தி கரையேறிய நிலையில், தினேஷ் மட்டும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்பு படையினர், 48 மணி நேரம் தேடி ஞாயிறு காலை தினேஷின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் கிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் டிக் டாக் வீடியோ எடுப்பதில் மும்முரமாக இருந்ததால், நீர் வரத்து அதிகரித்ததை கவனிக்காமல் இருந்ததால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது தெரிவந்துள்ளது. 

click me!