வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி.. கோச்சிங் சென்டரில் ஏற்பட்ட சோகம்.. டெல்லியில் போராட்டம்!

By Raghupati R  |  First Published Jul 28, 2024, 11:05 AM IST

டெல்லியில் உள்ள பயிற்சி மையத்தில் வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியானது தொடர்பாக டெல்லி போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


புதுடெல்லி ராஜேந்திர நகரில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தின் அடித்தளத்தை வெள்ளம் சூழ்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்த சோகமான சம்பவம் ஏற்பட்டுள்ளது.
 
இதுகுறித்து மத்திய துணை போலீஸ் கமிஷனர் எம்.ஹர்ஷவர்தன் கூறுகையில், “குற்ற வழக்கு பதிவு செய்துள்ளோம். எங்கள் தடயவியல் குழுக்கள் வந்துள்ளன. தடயவியல் சான்றுகள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த மூன்று பேர் உடல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மற்ற 13 முதல் 14 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் நலமாக உள்ளனர்" என்று டிசிபி ஹர்ஷவர்தன் கூறினார். சடலங்கள் மீட்கப்பட்டதையடுத்து அந்த இடத்தில் மாணவர்களின் குழு எம்சிடிக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

Tap to resize

Latest Videos

undefined

மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் போராட்டங்களை நடத்த வேண்டாம் என்று அனைத்து மாணவர்களையும் மத்திய டிசிபி ஹர்ஷவர்தன் கேட்டுக் கொண்டார். ஆம் ஆத்மி அரசை கடுமையாக சாடிய டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, டெல்லி மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும்.

அரவிந்த் கெஜ்ரிவால், அதிஷி மற்றும் அவர்களது அரசின் ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும். டெல்லி மாநகராட்சியின் ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும். சாக்கடையை ஏன் சுத்தம் செய்யவில்லை என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவார்களா?" என்றார். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை உண்டாக்கி உள்ளதால், காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.

உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ.295 காணாம போகுதா? அதற்கு இதுதான் காரணம்!

click me!