கோர விபத்து! பள்ளத்தில் கவிழ்ந்த கார்! 5 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் துடிதுடித்து பலி!

By vinoth kumar  |  First Published Jul 28, 2024, 7:17 AM IST

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 


ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு காஷ்மீரின் ஆனந்தநாக் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் காரில் கிஷ்த்வாரிலிருந்து மார்வாக் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதில், 5 குழந்தைகள் உள்பட 8 பேர் பயணித்தனர். கார் தக்சும் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: பெங்களூர் பிஜி ஹாஸ்டலில் இளம்பெண் கதறவிட்டு கொலை.. ம.பி.யில் வைத்து இளைஞரை தூக்கிய போலீஸ்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள், ஒரு ஆண், இரண்டு பெண்கள் என மொத்தம் 8 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசாருக்கும் மீட்புக்குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படை வீரர்கள் 8 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: சாப்ட்வேர் இன்ஜினியர் சம்பளத்தை மிஞ்சிய ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ டெலிவரி நபர்கள்.. என்னங்க சொல்றீங்க!

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

click me!