நிதி ஆயோக் கூட்டம்; மம்தா பானர்ஜி பொய்களை பரப்புகிறார் - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published Jul 27, 2024, 11:59 PM IST

நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மைக் அனைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுவது முற்றிலும் பொய் என நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.


நாட்டின் 9வது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், துணைநிலை ஆளுநர்கள், நிதி ஆயோக் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்ஜெட்டில் தமிழகம் உட்பட எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு மத்திய அரசு குறைவான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கூறி தமிழகம் புதுவை உட்பட 8 மாநில முதல்வர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர்.

Mk Stalin: ஒரு மாநில முதல்வரை இப்படி தான் நடத்துவீர்களா? மம்தாவுக்காக பொங்கிய ஸ்டாலின்

Tap to resize

Latest Videos

undefined

இதனிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருந்த போது தனது மைக் ஆப் செய்யப்பட்டதாகக் கூறி கூட்டத்தை விட்டு பாதியில் வெளியேறிய மம்தா, மேற்கு வங்கம் மாநிலத்திற்கு கூடுதல் நிதி கேட்டதால் தனது மைக் ஆப் செய்யப்பட்டு தாம் அவமதிக்கப்பட்டதாகும், தனக்கான அவமதிப்பு என்பது அனைத்து எதிர்க்கட்சிகளுக்குமானது என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், கூட்டம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மம்தா பானர்ஜிக்கு ஒதுக்கப்பட்ட முழு நேரத்திலும் அவர் பேசினார். எங்கள் மேஜைக்கு முன்னாள் இருந்த திரையில் அவர் பேசிய நேரம் காட்டப்பட்டது. சில முதல்வர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் கூடுதல் நேரம் பேசினர்.

தமிழ்நாடு தொல்லியல் துறைக்கும், சமஸ்கிருதத்துக்கும் என்னப்பா சம்பந்தம்? சீமான் ஆவேசம்

சில முதல்வர்களின் கோரிக்கைகளை ஏற்று கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. பேசிக் கொண்டிருக்கும் போது யாருக்கும் மைக் ஆப் செய்யப்படவில்லை. அதிலும் குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மைக் ஆப் செய்யப்படவில்லை. அவர் பொய்களை பரப்புகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!