பெங்களூர் பிஜி ஹாஸ்டலில் இளம்பெண் கதறவிட்டு கொலை.. ம.பி.யில் வைத்து இளைஞரை தூக்கிய போலீஸ்!

By vinoth kumar  |  First Published Jul 27, 2024, 4:04 PM IST

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கிருத்தி குமாரி கோரமங்களாவில் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். இவருடன் அறையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண்ணும் தங்கியிருந்தார். 


பெங்களூருவில் பெண்கள் தங்கும் விடுதியில் இளம்பெண் கொடூரமாக கொலை செய்த சம்பவம் தொடர்பாக அபிஷேக் என்ற இளைஞர் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கிருத்தி குமாரி கோரமங்களாவில் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். இவருடன் அறையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண்ணும் தங்கியிருந்தார். அந்த பெண் அபிஷேக் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். ஆனால், இவரது நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் கிருத்தி குமாரி உடன் தங்கியிருந்த பெண்ணிடம் காதலை முறித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இதனால் கிருத்தி குமாரி மீது அபிஷேக் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த ஜூலை 23ம் தேதி இரவு 11.10 மணியளவில் விடுதியின் 3வது மாடியில் கிருத்தி குமாரி அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளார். அப்போது கதவை திறந்த அவரை வெளியில் இழுத்து போட்டு கழுத்தில் கத்தியால் குத்தியது மட்டுமல்லாமல் கழுத்தை அறுத்துள்ளார். இதனால், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். 

இதனையடுத்து அபிஷேக் அங்கிருந்து தப்பித்தார். இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலாளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தலைமறைவாக இருந்த அபிஷேக்கை தீவிரமாக தேடிவந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் வைத்து கைது செய்தனர்.

click me!