
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜாஷ்பூர் மாவட்டத்தை சேர்ந்த் ஷிவ் சிராஜித் ராம் என்பவன் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளில் முக்கியக் குற்றவாளியாக குற்றம் சாட்டுப்பட்டு, காவல்துறையினர் தேடி வந்தனர். இவனை கைது செய்ய தீர்மானித்ததும் தலைமறைவான நிலையில், அதன்பின் இவர் பல வருடங்களாக காவல்துறையினர் கைகளில் சிக்கவில்லை.
இந்நிலையில் பூரணநகர் பகுதியில் கொடூர ஆயுதத்தை கொண்டு மர்மநபர் ஒருவர் பொதுமக்களை மிரட்டு, தாக்குதல்கள் நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற காவலர்கள் , மக்களுக்கு ஆயுதங்களை கொண்டு பிரச்சனை கொடுத்து வந்தவரை கைது செய்தனர். இந்நிலையில் கைதான நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
2008 ஆம் ஆண்டு நடத்த மூன்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளில் முக்கியக் குற்றவாளியாக தேடப்பட்ட வந்த ஷிவ் சிராஜித் ராம் என்பது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து அவன் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றத்தோடு சேர்த்து ஆயுத தடுப்புச் சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் குற்றம் இழைத்த நபர் 14 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தனை ஆண்டுகள் அவர் எங்கு இருந்தார்? அவருக்கு யார் அடைக்கலம் கொடுத்தார்..? எனும் பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மூன்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி 14 வருடங்கள் கழித்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.