பரபரப்பு.. விடுதியில் அசைவ உணவு இருக்க கூடாது.. ஏபிவிபி- இடதுசாரி மாணவர்களிடையே மோதல்..

By Thanalakshmi VFirst Published Apr 11, 2022, 10:39 AM IST
Highlights

ராமநவமியை முன்னிட்டு விடுதி உணவகத்தில் அசைவ உணவு வழங்குவது தொடர்பாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில் ஏபிவிபி மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்பினரிடையே நடந்த மோதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர்கள் நேற்று ராம நவமி என்பதால் அசைவ உணவு சாப்பிட விடாமல் மற்ற இடதுசாரி மாணவர்களை தடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் காவேரி விடுதியின் மெஸ் செயலாளரையும் ஏபிவிபி மாணவர்கள் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மறுபுறம், காவேரி விடுதியில் நடைபெற இருந்த ராம நவமி பிரார்த்தனைக்கு இடதுசாரி மாணவர்கள் இடையூறு விளைவிப்பதாக ஏபிவிபி குற்றம் சாட்டியுள்ளது. இந்த மோதல் சம்பவத்தையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மெஸ்ஸில் அசைவ உணவுகளை உண்பதற்கு எந்த தடையும் இல்லை என்று பல்கலைக்கழக சார்பில் அறிவிப்பு வெளியானது. மேலும் அதில் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து அசைவ உணவு சாப்பிடுவதற்கு எந்த தடையும் விதிக்க வில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதுக்குறித்து ஜெ.என்.யு பல்கலைக்கழக தலைவர் அஜய் துபே கூறுகையில், ரம்ஜானாக இருந்தாலும் சரி, ராம நவமியாக இருந்தாலும் சரி... அனைவரும் அவரவர் வழியில் கொண்டாடலாம்" என்று தெரிவித்தார். மேலும் “ஒவ்வொருவரும் அவரவர் மதத்தை பின்பற்றுகிறார்கள். விடுதியின் உணவகத்தை மாணவர்கள் கமிட்டி தான் நடத்தி வருகின்றனர். அவர் தான் உணவு பட்டியலை முடிவு செய்துள்ளனர். மேலும் இரு தரப்பினருக்குமிடையேயான மோதல் குறித்து தற்போதைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரவர் நம்பிம்க்கையின் படி வழிபாடு செய்ய பல்கலைக் கழகத்தில் எந்த தடையும் இல்லை,'' என்றார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இடதுசாரி மாணவர் அமைப்பு சேர்ந்த மாணவர்கள் கூறுகையில் , "அகில பாரதிய வித்யார்த்தி பரிஷித் உறுப்பினர்கள் உணவு விடுதியில் அசைவ உணவுகளை வழங்க விடாமல் தடுத்து வன்முறைத் தாக்குதலில் ஈடுப்படனர். இதில் சில மாணவர்கள் காமடைந்துள்ளனர்.ஏபிவிபியினர் விடுதி செயலாரையும் தாக்கி உள்ளனர். அவர்கள் இரவு உணவு மெனுவை மாற்றவும், அதில் அனைத்து மாணவர்களுக்கும் வழக்கமாக வழங்கப்படும் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மெஸ் கமிட்டியை வற்புறுத்தி தாக்கினர் என்றனர்.

மேலும் ஜேஎன்யு மற்றும் அதன் விடுதிகள் அனைவருக்கும் பொதுவான இடமாகும். அது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் சொந்தமானது இல்லை என்றும் குற்றம் சாட்டினர். ஆனால் ஏபிவிபி அமைப்பினர், "இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் விடுதியில் ஒரு பூஜை ஏற்பாடு செய்வதைத் தடுக்க முயன்றனர். சில சாதாரண மாணவர்கள், ராமநவமியை முன்னிட்டு மாலை3.30 மணிக்கு காவிரி விடுதியில் பூஜை மற்றும் ஹவன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பூஜையில் ஏராளமான ஜேஎன்யு மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கு இடதுசாரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பூஜையை நடத்தவிடாமல் தடுத்தனர். உணவு உரிமை விவகாரத்தில் பொய்யான சலசலப்பை உருவாக்கியுள்ளனர் என்று தெரிவித்தனர். 

இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக விடுதிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் இருதரப்பில் இருந்தும் 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

click me!