
பெங்களூரு மாரத்தானில் 92 வயது முதியவர் ஐந்து கிலோமீட்டர்கள் வெற்றிகரமாக ஓடிய சம்பவம் பலருக்கு முன் உதாரணமாக அமைந்துள்ளது. மாரத்தானில் பங்கேற்றவர்களில் பலர் சிறிது தூரத்தில் நின்றுவிட்ட நிலையில், மாரத்தானை முழுமையாக நிறைவு செய்த முதியவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மராத்தான்:
"ஸ்ரீ தத்தாத்ரேயா ஜி 92 வயது இளமை மிக்கவர். இவர் ஒவ்வொரு பெங்களூர்வாசியின் நெஞ்சுரம் மற்றும் உறுதிக்கு உதாரணமாக திகழ்கிறார். இன்று நடைபெற்ற பெங்களூரு மாரத்தானில், இவர் ஐந்து கிலோமீட்டர்கள் வெற்றிகரமாக ஓடினார். மாரத்தானில் இவர் பல இளைஞர்களை பின்னுக்குத் தள்ளி அசத்தியுள்ளார்," என பா.ஜ.க. எம்.பி.யான தேஜஸ்வி சூர்யா தனது டுவிட்டரில் தெரிவித்து இருக்கிறார்.
8 ஆவது பெங்களூரு மாரத்தான் இன்று காந்த்ரெவா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 42.2 கிலோமீட்டர் மாரத்தான், 21.09 கிலோமீட்டர் அரை மாரத்தான் மற்றும் ஐந்து கிலோமீட்டர்கள் ரேஸ் என மூன்று பிரிவுகளில் இந்த மாரத்தான் நடந்தது. மராத்தானை நிறைவு செய்யும் போது பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி சூர்யாவும் ஓடி வரும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இருக்கிறது.
பரிசு:
மராத்தான் ஒன்றில் 92 வயது முதியவர் கலந்து கொண்டு வெற்றிகரமாக ஓடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இவரின் முயற்சி பலருக்கும் எடுத்துக்காட்டாக அமைந்து உள்ளது.மாரத்தான் நிறைவை ஓட்டி வெற்றி பெற்ற அனைவருக்கும் சிறப்பு பரிசுகள், பதக்கம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம்:
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம்த்தை கேலி செய்யும் கருத்துக்களை டெல்லி சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. இளைஞர் அமைப்பு தலைவரும், எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா தலைமையில் கடந்த வாரம் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சாவினரும் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்புற கேட் மற்றும் சி.சி.டி.வி. கேமரா உள்ளிட்டவை சேதப்படுத்துப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.