மக்களே உஷார்..! பூஸ்டர் டோஸ் போடுவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிகோங்க.. முழு விவரம்..

Published : Apr 10, 2022, 12:39 PM IST
மக்களே உஷார்..! பூஸ்டர் டோஸ் போடுவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிகோங்க.. முழு விவரம்..

சுருக்கம்

18 வயது மேற்பட்டவர்கள் 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் ஆன நிலையில் மட்டும் பூஸ்டர் செலுத்தக்கொள்ளலாம் என்றும் முதல் 2 தவணைகளில் போடப்பட்ட மருந்தையே பூஸ்டர் தடுப்பூசிக்கும் பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.  

18 வயது மேற்பட்டவர்கள் 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் ஆன நிலையில் மட்டும் பூஸ்டர் செலுத்தக்கொள்ளலாம் என்றும் முதல் 2 தவணைகளில் போடப்பட்ட மருந்தையே பூஸ்டர் தடுப்பூசிக்கும் பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தனியார் மருத்துவமனை தடுப்பூசி மையங்களில் இன்று முதல் 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.இதற்கான நடைமுறைகள் குறித்து, மாநிலங்களின் சுகாதாரத் துறை செயலாளர்களுடன், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று காணொலிமூலம் ஆலோசனை நடத்தினார். 

அப்போது பேசிய அவர், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் ஆகியிருந்தால், மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தும் போது கோவின் இணையளத்தில் பதிவு செய்துள்ளதால், பூஸ்டர் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யத் தேவையில்லை என்று கூறினார். 

மேலும் ஒருவருக்கு முதல் 2 தவணைகளில் போடப்பட்ட அதே தடுப்பூசி மருந்தையே தான் பூஸ்டர் தடுப்பூசியில் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தனியார் மருத்துவமனை மையங்கள் கோரோனா தடுப்பூசி மருந்தின் விலையோடு கூடுதலாக ரூ.150 வரை சேவைக் கட்டணமாக வசூலிக்கலாம் என்று கூறினார். 

ஆனால், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய விவரம், கோவின் இணையளத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், முன்பு வெளியிட்ட வழிகாட்டுதல்களை தனியார் கரோனா தடுப்பூசி மையங்கள் பின்பற்ற வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி செலுத்த, மருந்தின் விலைக்கு மேலாக ரூ.150 வரை சேவை கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம்.12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக செலுத்தப்படும் தடுப்பூசி திட்டத்தையும் மாநிலங்கள் தொடர்ந்து துரிதமாக செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், பூஸ்டர் தடுப்பூசியை, அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவோ அல்லது தனியார் மையங்களில் பணம் செலுத்தி்யோ போட்டுக் கொள்ளலாம் என்று கூறினார். அண்மையில் கொரோனா தடுப்பூசியின் விலை குறைக்கப்பட்டது. அதன் படி கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ.600 இருந்து ரூ.225 ஆகவும் கோவாக்சின் ரூ.1,200 யிலிருந்து ரூ.225-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துகொண்ட இளம்பெண்! விமரிசையாக நடத்தி வைத்த கிராம மக்கள்!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!