அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் 3ஆவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
பியூ ஆராய்ச்சி மைய மதிப்பீடுகளின்படி, அமெரிக்காவில் இந்திய சட்டவிரோத குடியேறிகள் சுமார் 7,25,000 உள்ளனஎ. இது அந்நாட்டில் மெக்சிகோ மற்றும் எல் சால்வடாருக்கு அடுத்தபடியாக அங்கீகரிக்கப்படாத குடியேற்றவாசிகளின் மூன்றாவது பெரிய மக்கள்தொகையாகும்.
2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவின் 10.5 மில்லியன் அங்கீகரிக்கப்படாத குடியேற்றவாசிகள், அந்நாட்டில் பிறந்த அமெரிக்கர்களின் மக்கள் தொகையில் 3 சதவீதமாகவும், வெளிநாட்டில் பிறந்தவர்களின் மக்கள்தொகையில் 22 சதவீதமாகவும் இருந்தது என்று பியூ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
2007 முதல் 2021 வரை அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படாத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது. உலகில் உள்ள ஒவ்வொரு பிராந்தியத்தில் இருந்து அமெரிக்காவினுள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்தன. இதில், மத்திய அமெரிக்காவில் இருந்து குடியேறிய 2,40,000, தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் இருந்து குடியேறிய 1,80,000 என்ற எண்ணிக்கை அதிகமாகும்.
அமெரிக்காவில் வாழும் மெக்சிகோ நாட்டை சேர்ந்த அங்கீகரிக்கப்படாத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டில், 41 லட்சமாக இருக்கிறது. இது 1990களை ஒப்பிடும் போது மிகவும் குறைவாகும். அதேபோல், எல் சால்வடார் நாட்டை சேர்ந்த அங்கீகரிக்கப்படாத குடியேற்றவாசிகளின் அமெரிக்காவில் 8,00,000 பேரும், இந்தியாவை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் 7,25,000 பேரும் வசிப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
அதிக எண்ணிக்கையிலான அமெரிக்க அங்கீகரிக்கப்படாத குடியேற்றவாசிகளைக் கொண்ட நாடுகளில், இந்தியா, பிரேசில், கனடா மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் அனைத்தும் 2017 முதல் 2021 வரை வளர்ச்சியை சந்தித்துள்ளன என்றும் பியூ ஆராய்ச்சி மைய அறிக்கை கூறுகிறது.
2021 ஆம் ஆண்டில் அதிக அங்கீகரிக்கப்படாத குடியேற்ற மக்கள்தொகை கொண்ட ஆறு மாநிலங்கள் முறையே, கலிபோர்னியா (1.9 மில்லியன்), டெக்சாஸ் (1.6 மில்லியன்), புளோரிடா (900,000), நியூயார்க் (600,000), நியூ ஜெர்சி (450,000) மற்றும் இல்லினாய்ஸ் (400,000) என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, அதானியை பிக்பாக்கெட்டுகளுடன் ஒப்பிட்டு ராகுல் கடும் விமர்சனம்!
2021ஆம் ஆண்டில், பிற நாடுகளில் இருந்து அங்கீகரிக்கப்படாத குடியேற்றவாசிகளின் மக்கள் தொகை 6.4 மில்லியனாக இருந்தது. இது 2017ஆம் ஆண்டை விட 9,00,000 என்று எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.
குவாத்தமாலா (700,000) மற்றும் ஹோண்டுராஸ் (525,000) ஆகியவை அங்கீகரிக்கப்படாத அமெரிக்க குடியேற்றவாசிகளைக் கொண்ட பிற நாடுகளாகும். பியூ ஆராய்ச்சி மைய மதிப்பீடுகளின்படி, 2021ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படாத புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 10.5 மில்லியனை எட்டுவதற்கு, 2017ஆம் ஆண்டு முதலே இந்தியா, குவாத்தமாலா மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்ததே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமெரிக்கா, கரீபியன், தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்கா ஆகிய உலகின் மற்ற எல்லாப் பகுதிகளிலிருந்தும் அங்கீகரிக்கப்படாத குடியேற்றவாசிகள் அமெரிக்காவில் அதிகரித்துள்ளனர்.