தெலங்கானாவில் திருட வந்த இடத்தில் பணம் எதுவும் கிடைக்காததால் விரக்தி அடைந்த திருடன் தன்னிடம் இருந்த 20 ரூபாய் பணத்தை வைத்துச் சென்ற சம்பவம் இணையத்தில் வைரல்.
தெலங்கானா மாநிலம் ரங்காராநட்டி மாவட்டம், மகேஸ்வரம் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் செயல்படும் உணவகம் ஒன்றில் நேற்று இரவு அடையாளம் தெரியாத வகையில் முகமூடி, தொப்பி உள்ளிட்டவற்றை அணிந்த மர்ம நபர் திருடுவதற்காக சென்றுள்ளான். கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கடையில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதேனும் உள்ளதா என தேடி பார்த்துள்ளான். ஆனால், அங்கு எந்த பொருளும் கிடைக்கவில்லை.
Masked thief shows his disappointment on CCTV as he didn't find any amount in an eatery he tried to loot at Maheshwaram. Leave Rs 20 note for a water bottle he picked from the fridge & walks out pic.twitter.com/fegJ3oBtDZ
— Pinto Deepak (@PintodeepakD)பொருள் தான் எதுவும் கிடைக்கவில்லை பணத்தையாவது எடுத்துச் செல்வோம் என்று பார்த்த போது பணமும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த திருடன் கண்காணிப்பு கேமராவின் முன்பாக வந்து ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. அப்படி இருக்கும் போது கேமராவை மட்டும் ஏன் பொருத்தி வைத்துள்ளீர்கள் என்று கேட்பது போல் கேமரா முன்பாக சைகை காண்பித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.
undefined
பின்னர் கடைக்கு வந்ததற்கு எதையாவது சாப்பிட்டுவிட்டாவது செல்வோம் என்று நினைத்து பிரிட்ஜை திறந்து பார்த்த போது அதில் தண்ணீர் மட்டுமே இருந்துள்ளது. பின்னர் அந்த தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு உங்கள் கடையில் நான் எதையும் எடுத்துச் செல்லவில்லை. குடித்த தண்ணீருக்கும் பணம் கொடுத்து விடுகிறேன் என்று சைகையில் கூறிவிட்டு தன்னிடம் இருந்த 20 ரூபாயை மேஜை மீது வைத்துச் சென்றான்.
இந்நிலையில் கடையின் உரிமையாளர் இன்று மீண்டும் வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடைக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த இடத்தில் அப்படியே இருந்தது. மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது திருடன் செய்த அட்ராசிட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது.