பாஸ்போர்ட், விசா இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைவது எப்படி? சர்ச்சையில் சிக்கிய யூடியூபர்

By Raghupati R  |  First Published Jul 27, 2024, 11:04 AM IST

பாஸ்போர்ட் அல்லது விசா இல்லாமல் எப்படி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைவது என்பதை பங்களாதேஷ் எனப்படும் வங்கதேசம் யூடியூபர் ஒருவர் நிரூபித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது.


மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் வழியாக இந்தியாவிற்குள் தினசரி சட்டவிரோத ரோஹிங்கியாக்கள் குடியேறுவதை அறிந்திருந்தாலும், இந்த தீவிரமான பிரச்சினைக்கு எதிராக இந்திய அரசாங்கம் இன்னும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அடிக்கடி எழுப்பப்படும் நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த யூடியூபர் தான் அதற்கு முக்கிய காரணம். அவர் வெளியிட்டுள்ள வீடியோ இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் இடம்பெற்றுள்ளது தான்.

வங்கதேச யூடியூபர் டிஹெச் டிராவலிங் இன்ஃபோ, பாஸ்போர்ட் அல்லது விசா இல்லாமல் வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் எப்படி நுழைவது என்பது குறித்த 21 நிமிட வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் எப்படி எல்லையை வெற்றிகரமாக கடந்து சிலருடன் இந்தியாவுக்குள் நுழைந்தார் என்பதை செய்து காட்டினார். அந்த வீடியோவில், அவர் வங்கதேசத்தின் சில்ஹெட்டில் உள்ள ஜம்காவ் கரோ கிராமத்தின் எல்லையான வங்காளதேசப் பகுதியை நோக்கிச் செல்கிறார்.

Latest Videos

undefined

 

பிறகு அங்கிருந்து மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியை எளிதில் அணுகலாம் என்று அவர் கூறுகிறார். அவர் இறுதி எல்லையை அடைந்தார். அங்கு ஒரு பலகை, "வங்காளதேசத்தின் கடைசி எல்லை - சர்வதேச எல்லை. கடப்பது தடைசெய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடத்தில், அவர் இந்தியா மற்றும் வங்கதேசத்தை இருபுறமும் காட்டும் மைல்கல்லைக் காட்டுகிறார். இருப்பினும், இந்த எல்லையில் வேலி அல்லது அது போன்ற எதுவும் இல்லை. பின்னர் அவர் இந்திய நிலம் என்று அழைக்கும் இடத்திற்கு தொடர்ந்து நடந்து செல்கிறார்.

அவர் தூரத்தில், வேலியைக் காட்டுகிறார். அவரும் அவரது நண்பர்கள் குழுவும் ஃபென்சிங்கிற்கு அருகில் நடக்கும்போது அவர் வேலியை நோக்கி செல்கிறார். பிறகு அவர் இந்த "பைப்லைன்கள்" வழியாக மக்கள் நுழைய முடியும் என்று கூறி,  இது இந்தியாவிற்கு நேரடியான பாதை என்றும் கூறுகிறார். அப்போது அங்கு ஒரு படகுக்காரர் வருகிறார். அது மேகாலயா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யூடியூபர் இந்தியாவிற்குள் நுழையாவிட்டாலும், இறுதியில், அவர் விசா அல்லது பாஸ்போர்ட் இல்லாமல் நுழைய வேண்டாம் என்று வலியுறுத்துகிறார்.

❗National Security Alert❗

A Bangladeshi YouTuber who is making videos on his YouTube channel and telling how to enter In India without passport and visa.pic.twitter.com/smwoC29qZU

— DUDI_PARMARAM🇮🇳 (@PARMARAMDU12861)

அவ்வாறு செய்வது ஆபத்தானது மற்றும் ஆபத்து தனிநபர் மீது இருக்கும் என்று எச்சரித்தார். இருப்பினும், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் எப்படி நுழைவது என்பது பற்றிய வீடியோ சர்சைக்குரியது என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். இது உண்மையில் தீவிரமான பிரச்சினை ஆகும். கடுமையான நடவடிக்கைகளுடன் அரசாங்கம் தீர்க்க வேண்டிய ஒரு தீவிரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த வீடியோ சமீப காலத்தைச் சேர்ந்தவை அல்ல என்றும், இருப்பினும் உரிய அனுமதி இல்லாமல் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து இந்தியாவுக்குள் நுழைவது தேச பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது என்று எச்சரிக்கிறார்கள் விமர்சகர்கள்.

ரூ.4000 வரை சரிந்த தங்க விலை.. இதற்கு காரணம் மத்திய அரசே கிடையாது.. அப்போ யாரு தெரியுமா?

click me!