சாப்ட்வேர் இன்ஜினியர் சம்பளத்தை மிஞ்சிய ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ டெலிவரி நபர்கள்.. என்னங்க சொல்றீங்க!

By Raghupati R  |  First Published Jul 26, 2024, 4:26 PM IST

ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ டெலிவரி செய்பவர்களின் ஊதியம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


பெங்களூரில் உள்ள ஸ்விக்கி (Swiggy) மற்றும் சோமேட்டோ (Zomato) டெலிவரி முகவர்களின் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.  ஃபுல் டிஸ்க்ளோஷர் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், லவ்வினா காமத் என்பவர் இரண்டு டெலிவரி முகவர்களிடம் பேசினார். அதில் அந்த இருவரும் சராசரி ஐடி பொறியாளரை விட அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்தார். இந்தியாவில், ஒரு ஐடி பொறியாளர் சராசரியாக மாதம் ரூ.20,000 சம்பாதிக்கிறார் என்றார் காமத்.

இருப்பினும், அவர் பேசிய இரண்டு டெலிவரி ஏஜெண்டுகளும் இரண்டு மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்று அவர்கள் பேசியதிலிருந்து தெரிய வந்துள்ளது. ஸ்விக்கியின் டெலிவரி டிரைவராக பணிபுரியும் சிவா, மாதம் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை சம்பாதிக்கிறார். இவருக்கு வயது 22 தான் என்றாலும் கடந்த மூன்று வருடங்களாக டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வருகிறார். 
இதுபற்றி மேலும் கூறிய ஸ்விக்கி ரைடர், "எனக்கு டிப்ஸ் மூலம் மாதம் சுமார் ரூ.5,000 கிடைக்கிறது. கடந்த ஆறு மாதங்களில், சிவா ரூ.2 லட்சத்தை சேமிக்க முடிந்தது” என்று கூறினார்.

Tap to resize

Latest Videos

undefined

இந்த பணத்தை வைத்து தனது கிராமத்தில் ஒரு தொழிலைத் தொடங்க உள்ளார் என்று கூறினார்.  பிறகு மூன்று வருடங்களாக Zomato டெலிவரி ஏஜென்டாக பணிபுரியும் தையப்பாவிடம் பேசினார் காமத். தையப்பா அவர் மாதம் ₹40,000 சம்பாதிப்பதாக கூறினார். இதுபற்றிய வீடீயோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டு, காமத் பின்வருமாறு எழுதியுள்ளார். அதில், உணவுகளை டெலிவரி செய்பவர்கள் மென்பொருள் பொறியாளர்களை விட அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

டெலிவரி பார்ட்னர்கள் இதை ஒரு தொழிலாக பார்க்கவில்லை, ஆனால் சிறந்த வாய்ப்புகளுக்காக பணம் சம்பாதிப்பதற்கான வழிமுறையாக பார்க்கிறார்கள். அதேபோல டெலிவரி பார்ட்னர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 13 மணி நேரம் வரை வேலை செய்து இவ்வளவு சம்பாதிக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ.295 காணாம போகுதா? அதற்கு இதுதான் காரணம்!

click me!