குத்தகைதாரர்ர்கள் கொடுப்பது வரி அல்ல! அது குத்தகை பணம்தான்! கனிம வள வரி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

By Dinesh TG  |  First Published Jul 25, 2024, 4:12 PM IST

அந்தந்த மாநிலங்களில் இருந்து எடுக்கப்படும் கனிம வளங்களுக்கு வரி விதிக்க அந்தந்த மாநில அரசுகளுக்கே உரிமை உள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
 


ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமாக கனிமங்கள் கிடைத்து வருகின்றன. அவை அந்தந்த இடஅமைவுகள், பூலோக வரையரையின் படி படிமங்களாகவும், தாதுக்களாகவும் கிடைக்கின்றன. கனிம வளங்கள் மீது மாநில அரசுகள் உரிமை கோரக்கூடாது எனக்கோரி மத்திய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி DY .chandrachud தலைமையலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை மேற்கொண்டது.

இந்த வழக்கில் (ஜூலை 25) இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதில்,தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகள் ஒரேமாதிரியான தீர்ப்பை வழங்கியுள்ளனர். நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் வேறுமாதிரியான மாறுபட்ட தீர்ப்பை கொடுத்துள்ளார்.

தீர்ப்பு வாசிப்பு

தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், தீர்ப்பை வாசிக்க தொடங்கினார். அதில், சுரங்கங்கள், குவாரிகளை உள்ளடக்கிய நிலங்களுக்கு வரி விதிக்கும் முறைகளை சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் 1957 சட்டம் ஏதும் வரையறுக்கவில்லை என குறிப்பிட்டார்.

அரசியலமைப்புச்சட்டம் 246-வது பிரிவின் கீழ் மாநில சட்டமன்றங்களே சுரங்கங்கள் மற்றும் குவாரிகளுக்கு வரி விதிக்கும் அதிகாரத்தை பெறுகின்றன என தெளிவுபடுத்தினார்.

Powerful Passport | இந்த நாட்டு பாஸ்போர்ட் இருந்தா போது! 195 நாடுகளுக்கு விசா இல்லாம போகலாம்!

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் மூலம், மாநில அரசுகள் தங்கள் வரையறுக்கப்பட்ட வரம்புக்குள் வரக்கூடிய சுரங்கங்கள் மற்றும் குவாரிகளுக்கு வரி விதிப்பதை மத்திய அரசுகள் கட்டுப்படுத்த முடியாது. சுரங்கங்கள் மற்றும் கல்குவாரிகளை குத்தகைக்கு எடுப்பவர்கள், மாநில அரசுகளுக்கு செலுத்தும் ராயல்டி என்பது வரி அல்ல என்றும், அது குத்தகை பணம்தான் என நீதிபதி தெரிவித்தார்.

மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி நாகரத்னா வழங்கிய தீர்ப்பில், ‘சுரங்கங்கள் மற்றும் கனிமங்களைக் கொண்ட நிலங்களுக்கு வரி விதிக்க மாநிலங்களுக்கு உரிமை இல்லை’ என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

Kamala Harris: அமெரிக்க அதிபர் பதவியைக் குறிவைக்கும் கமலா ஹாரிஸ்! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

click me!