27 ஆயிரம் வைரங்கள்.. பால் தாக்கரே உருவம்.. திகைத்து பார்த்த உத்தவ் தாக்கரே.. அடேங்கப்பா!

By Raghupati R  |  First Published Jul 27, 2024, 8:09 AM IST

27,000 வைரங்களால் செய்யப்பட்ட பால் தாக்கரே உருவப்படத்தை பார்த்து மெய் மறந்து பார்த்தார் உத்தவ் தாக்கரே.


தனது 64வது பிறந்தநாளை முன்னிட்டு, சிவசேனா (UBT) தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரேவுக்கு வெள்ளிக்கிழமை 'வாழ்நாள் பரிசு' கிடைத்தது என்றே கூறலாம். அப்படி அவருக்கு என்ன கிடைத்தது என்பதை பார்க்கலாம். அவரது தந்தை மறைந்த பாலாசாகேப் கேசவ் தாக்கரேவின் தனித்துவமான உருவப்படம் அவருக்கு கிடைத்து. அதில் என்ன ஸ்பெஷல் என்றுதானே கேட்கிறீர்கள்.

சிறப்பு அம்சம் இருக்கும். அது என்னவென்றால், 27,000 பெரிய மற்றும் சிறிய வைரங்கள் உள்ளது. தாக்கரேயின் ஊடக ஆலோசகர் ஹர்ஷல் பிரதான் இதற்கான ஏற்பாட்டை செய்தார். தாதரை சேர்ந்த பிரபல கலைஞரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஷைலேஷ் அச்சரேக்கரால் இது உருவாக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

சஞ்சய் ராவத், விநாயக் ரவுத், நிதின் நந்தகோன்கர் மற்றும் ஹர்ஷல் பிரதான் போன்ற மூத்த கட்சித் தலைவர்கள் முன்னிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் உத்தவ் தாக்கரேவின் இல்லமான மாதோஸ்ரீயில் அச்சரேக்கரால், இந்த உருவப்படம் வழங்கப்பட்டது. இந்த உருவப்படத்தை நன்றாகப் பார்த்துவிட்டு உத்தவ் தாக்கரே பின்வருமாறு கூறினார்.

“வைரங்களில் பால் தாக்கரேவின் இந்த உருவப்படம் வசீகரமாகவும், கண்ணைக் கவரும் விதமாகவும் உள்ளது” என்று கூறினார். இதை வடிவமைத்த அச்சரேக்கர், 5 மிமீ, 3 மிமீ மற்றும் 2 மிமீ அளவுள்ள சிறிய வைரங்களை வைத்து நேர்த்தியாக வடிவமைத்துள்ளார்.

இதுபற்றி கூறிய அவர், “வைரங்கள் பொதுவாக நிறமற்றவை அல்லது வெண்மையாக இருப்பதால், வெவ்வேறு பக்கங்களில் இருந்து வெளிச்சம் அவற்றின் மீது விழுவதால், வண்ணமயமான விளைவுக்காக அவை ஸ்வரோவ்ஸ்கிஸுடன் ஒருங்கிணைக்கப்பட்டன.

இது ஒரு மாயாஜால மல்டி-ஹூட் தாக்கத்தை அளிக்கிறது" என்று அச்சரேகர் விளக்கினார். அச்சரேக்கர், 2005 இல் இருந்து தற்போது வரை உலகம் முழுவதும் இருந்து 160க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஆயிரம் மட்டும் போதும்.. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டலாம்.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

click me!