
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தரிசனத்திற்கு பக்ததர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புகளால் இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா கட்டுபாடுகள் இல்லாததால் நாளை முதல் சபரிமலையில் மண்டல காலம் தொடங்குகிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. தரிசனத்திற்கு பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துவது கட்டயமாக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பம்பைக்கு செல்ல நாளை முதல் ஜனவரி 18ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க;- சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்.. மாற்று வழி இதுதான் ! தேவசம்போர்டு அறிவிப்பு
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல - மகர விளக்கு சீசன் முதல் 2023-ம் ஆண்டு மண்டல சீசன் வரையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாட்கள் விவரம் வெளியாகியுள்ளது.
* மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
* அடுத்த மாதம் 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது.
* மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி நடை திறக்கப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும். 20-ம் தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.
* பின்னர் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12-ம் தேதி நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைக்கு பின்னர் 17-ம் தேதி அடைக்கப்படும். பங்குனி மாத பூஜைக்காக மார்ச் 14-ம் தேதி நடை திறக்கப்பட்டு 19-ம் தேதி அடைக்கப்படும்.
இதையும் படிங்க;- Sabarimala : சபரிமலை பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி.!