Delhi AIIMS:டெல்லி எய்ம்ஸ் அவலம்! ஆப்ரேஷன் முடிந்து சிறுமி சாப்பிட்ட முதல் உணவில் கரப்பான்பூச்சி

By Pothy RajFirst Published Nov 15, 2022, 12:27 PM IST
Highlights

டெல்லி புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து 4 வயது சிறுமி சாப்பிட்ட முதல் உணவில் கரப்பான்பூச்சி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து 4 வயது சிறுமி சாப்பிட்ட முதல் உணவில் கரப்பான்பூச்சி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை புகழ்பெற்றது, பல்வேறு நவீன சிகிச்சைகளுக்கும், உயிர்காக்கும் அறுவைசிகிச்சைகளுக்கும் பெயர் பெற்ற மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையில் 4 வயது சிறுமிக்கு ஒருவருக்கு கடந்த வாரம் உடலில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சை நடந்தது.

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இந்தோனேசியா பயணம்: ஆலோசிக்கப்படும் அம்சங்கள்?

இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் ஐசியு வார்டில் இருந்து இயல்பு நிலைக்குத் திரும்பி அந்த சிறுமி தனிவார்டுக்கு மாற்றபட்டார். சிறுமியின் உடல்நிலை மெல்ல இயல்புநிலைக்குத் திரும்புவதால், சிறுமிக்கு வழக்கமான உணவுகளை வழங்க மருத்துவர்கள்  பரிந்துரைத்திருந்தனர்.

ஜி20 உச்சி மாநாடு: அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு

இதன்படி அறுவை சிகிச்சைக்குப்பின் 4வயது சிறுமி தனது முதல் உணவை சாப்பிட காத்திருந்தார். எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகமும் சிறுமிக்கு உணவு வழங்கியது. எய்ம்ஸ் மருத்துவமனையில் வழங்கப்பட்ட உணவு தரமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் அந்த சிறுமியும் உணவைச் சாப்பிட்டார். 

ஆனால், உணவில் இருந்த பருப்பில் ஏதோ சிறு பூச்சி போன்ற இருந்ததை பெற்றோர் பார்த்து எடுத்தபோது அது கரப்பான்பூச்சி என்பது தெரியவந்தது.இதைப் பார்த்த சிறுமியும், அவரின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்

 

Pathetic and frightening state of affairs at the most prestigious Medical facility in National Capital- Serving „Cockroach Daal“ to a 4 year old as first meal post major stomach surgery Shocked beyond belief 😒 pic.twitter.com/FU2fu7LuxH

— sahil zaidi (@sahilzaidi3)

எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருந்ததை ட்விட்டரில் ஒருவர் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஷாகில் ஜெய்தி என்ற ட்விட்டர் பயனாளி பதிவிட்ட கருத்தில் “ டெல்லி எய்ம்ஸ் போன்ற புகழ்பெற்ற, அதிநவீன வசதிகள் கொண்ட மருத்துவமனையின் நிலையைப் பார்த்து வேதனையாக இருக்கிறது. 4வயது சிறுமிக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை முடிந்து, முதன்முதலில் வழங்கப்பட்ட உணவில், கரப்பான்பூச்சி இருந்தது.நம்பமுடியாத அளவில் அதிர்ச்சியாகஇருக்கிறது”எனத் தெரிவித்துள்ளார்.

ஜி20 உச்சி மாநாட்டில் உணவுப் பாதுகாப்பு,சுற்றுச்சூழல் பற்றி ஆலோசிப்பேன்:பிரதமர் மோடி அறிவிப்பு

தலைநகர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இதுபோன்று உணவில் பூச்சிஇருப்பது  போன்ற புகார் இதுதான் முதல்முறையாகும். இதற்கு முன், மருத்துவர்கள் கேண்டீனில் சாப்பிட்ட போது பூச்சி இருந்தது என்ற செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

click me!