துப்பாக்கி மற்றும் வன்முறையை ஊக்குவிக்கும் பாடல்களுக்கு தடை... பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு

By Narendran SFirst Published Nov 14, 2022, 11:41 PM IST
Highlights

துப்பாக்கி மற்றும் வன்முறையை ஊக்கவிக்கும் பாடல்களுக்கு தடை விதித்து பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

துப்பாக்கி மற்றும் வன்முறையை ஊக்கவிக்கும் பாடல்களுக்கு தடை விதித்து பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாப்பில் அன்மைக்காலமாக துப்பாக்கி சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சீக்கிய மத நூலை அவமதித்ததாக தேரா சச்சா சவுதாவின் ஆதரவாளர் பிரதீப் சிங் என்பவர் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோல் சிவசேனா கட்சித் தலைவர் சுதிர் சூரியும் சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்தடுத்த இதுபோன்ற சம்பவங்களால் பஞ்சாப் சட்ட ஒழுங்கு குறித்து கண்டனங்கள் எழுந்தன.

இதையும் படிங்க: இறந்த பெண்களின் உடல்களை போட்டோ எடுத்து ரசித்த நபர்… கர்நாடகாவில் நிகழ்ந்த பயங்கரம்!!

இந்நிலையில், துப்பாக்கி மற்றும் வன்முறையை ஊக்குவிக்கும் வகையிலான பாடல்களுக்கு பஞ்சாப் அரசு தடை விதித்துள்ளது. மேலும் இதுக்குறித்த பஞ்சாப் அரசின் டிவிட்டர் பதிவில், எந்த ஒரு சமூகத்திற்கு எதிராகவும் வெறுப்பூட்டும் பேச்சுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். துப்பாக்கி மற்றும் வன்முறை கலாசாரத்தை ஊக்குவிக்கும் பாடல்களை முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: குஜராத் தேர்தல்: வட்கம் தொகுதியில் ஜிக்னேஷ் மேவானியை களமிறக்குகிறது காங்கிரஸ் கட்சி

சமூக ஊடகங்கள் உட்பட பொதுவெளியில் ஆயுதங்களை காட்சிப்படுத்தக் கூடாது. மேலும், பொதுக்கூட்டங்கள், மதவழிபாட்டுத் தலங்கள், திருமண விழாக்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கும், காட்சிப்படுத்தவும் தடை, ஆயுத உரிமங்களை 3 மாதங்களுக்குள் ஆய்வு செய்து, தவறான நபர்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், இதற்காக வரும் நாட்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!