
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று அவரின் நினைவிடத்தில் காங்கிரஸ்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
டெல்லியில் சாந்திவான் பகுதியில் உள்ள ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்துக்கு இன்று காலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மலர்கள் தீவி மரியாதை செலுத்தினர்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு… அவர் குறித்து யாரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!!
அதுமட்டும்லலாமல் நேருவின் நினைவாக ஏராளமான பலூன்களை மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி ஆகியோர் பறக்கவிட்டனர்.
கடந்த 1889ம் ஆண்டு பிறந்த ஜவஹர்லால் நேரு நாட்டில் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர், 1947 முதல் 1964வரை பிரதமராக இருந்து, 1964, மே 27ம் தேதி மறைந்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “பண்டிட் நேரு, நவீன இந்தியாவைக் கட்டமைத்தவர். நேருவின் அற்புதமான பங்களிப்பு இல்லாமல் 21ம் நாற்றாண்டு இந்தியாவை கற்பனை செய்துபார்க்க முடியாது. ஜனநாயகத்தின் சாம்பியன், சவால்கள் இருந்தபோதிலும் நேருவின் முற்போக்குக் கருத்துக்கள், இந்தியாவின் சமூக, அரசியல் மேம்பாட்டுக்கும் வழிவகுத்தது. உண்மையான தேசபக்தருக்கு எனது அஞ்சலி ” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் குறிப்பிடுகையில் “ திரிபுவாதிகள் தொடர்ந்து சிதைப்பதும், இழிவுபடுத்துவதும், அவதூறுப் பரப்பினாலும் நேரு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார். அவரின் கணிப்புகள் 2014ம் ஆண்டுக்குககப்பின்புதான் அதிகரித்தன” எனத்தெரிவித்தார்
ராகுல் காந்தி செல்லும் பாரத் ஜோடோ நடைபயணத்தில், காங்கிரஸ் தொண்டர்களுக்கு நேருவின் தி டிஸ்கவரி ஆப் இந்தியா நூலை ஆங்கிலம் மற்றும் இந்திப் பதிப்பை ஜெய்ராம் ரமேஷ் வழங்கினார்.
குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு புதிய சிக்கல்!சுயேட்சையாக களமிறங்கும் அதிருப்தியாளர்கள்
காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ டவிட்டர் கணக்கில் பதிவிட்ட கருத்தில் “ இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, சமூக ஜனநாயகவாதி, பொதுநல அரசை விரும்பினார். மனிதநேய மதச்சார்பின்மைவாதியாக நேரு இருந்தார், விவசாயம் மற்றும் அறிவியல் உட்பட அனைத்து பிரிவுகளிலும் இந்த தேசத்தின் வளர்ச்சியை நேரு விரும்பினார். அவரது பிறந்தநாளான இன்று, அவரின் சாதனைகளைக் கொண்டாடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.