2022 Gujarat Election: குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு புதிய சிக்கல்!சுயேட்சையாக களமிறங்கும் அதிருப்தியாளர்கள்

By Pothy Raj  |  First Published Nov 14, 2022, 12:48 PM IST

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவில் சீட் கிடைக்காததால், ஏராளமான அதிருப்தியாளர்கள், சுயேட்சையாகப் போட்டியிட முடிவு செய்து வேட்புமனுத் தாக்கலுக்கு தயாராகியுள்ளனர். இவர்களை சமாதானப்படுத்தும் முடிவில் பாஜக மேலிடம் இறங்கியுள்ளது.


குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவில் சீட் கிடைக்காததால், ஏராளமான அதிருப்தியாளர்கள், சுயேட்சையாகப் போட்டியிட முடிவு செய்து வேட்புமனுத் தாக்கலுக்கு தயாராகியுள்ளனர். இவர்களை சமாதானப்படுத்தும் முடிவில் பாஜக மேலிடம் இறங்கியுள்ளது.

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும், சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய இரு தேதிகளில் இரு கட்டங்களாக நடக்கிறது. டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதுவரை பாஜக மேலிடம் 166 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் ஏற்கெனவே இருக்கும் எம்எல்ஏக்கள் 40 எம்எல்ஏக்களுக்கு பாஜக மேலிடம் வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த பலருக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

ஜி20 உச்சி மாநாட்டில் உணவுப் பாதுகாப்பு,சுற்றுச்சூழல் பற்றி ஆலோசிப்பேன்:பிரதமர் மோடி அறிவிப்பு

இதனால் பாஜகவில் இருந்தும், சீட் கிடைக்காமல் இருப்போரு கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் வதோதராவில் உள்ள வகோடியா தொகுதி பாஜக எம்எல்ஏ மது ஸ்ரீவஸ்தவா தனக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் கட்சியிலிருந்து விலகி, எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். வரும் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு எதிராக சுயேட்சையாக களமிறங்க ஸ்ரீவத்சவா திட்டமிட்டுள்ளார்.

குஜராத் தேர்தலில் ஏராளமான புதிய முகங்களுக்கும், காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்து பாஜகவில் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு அளித்துள்ளது பாஜக மேலிடம். இதனால், பாஜகவில் நீண்டகாலம் இருந்து கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்களுக்கு சீட் இல்லாததால் அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளது பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநர் நீக்கம்: அவசரச் சட்டத்தை ஒப்புதலுக்கு ஆளுநருக்கே அனுப்பிய கேரள அரசு

சீட் கிடைக்காத அதிருப்தியில் பாஜகவில் இருந்த பலரும், தங்கள் ஆதரவாளர்களுடன் அடுத்த நடவடிக்கை  குறித்து ஆலோசித்து வருகிறார்கள். இதில் பாஜக மூத்த தலைவரும், பழங்குடியின பிரிவு தலைவரான ஹர்சத் வசவா நான்தோத் தகுதியில் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டார். பாஜக சார்பில் போட்டியிட்டு இருமுறை ஹர்சத் எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளார்.

நர்மதா மாவட்டத்தில் நான்தோத் தொகுதி தற்போது காங்கிரஸ் வசம் உள்ளது. இந்தத் தொகுதியில் போட்டியிட ஹர்சத் சுயேட்சையாக களமிறங்கியுள்ளார்.

தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியை கட்டம் கட்டும் பாஜக! ஜனசேனா, டிடிபியுடன் கூட்டணிக்கு ‘மாஸ்டர் பிளான்’

வதோதரா மாவட்டத்தில் பாஜக முன்னாள் எம்எல்ஏ தினேஷ் படேலும் சுயேட்சையாக களமிறங்குகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அக்சய் படேலுக்கு கர்ஜன் தொகுதியில் பாஜக சீட் வழங்கியதால் அதிருப்தி அடைந்த பாஜக முன்னாள் எம்எல்ஏ சதீஸ் படேலும் சுயேட்சையாக களமிறங்குகிறார். பாஜக மாநிலத் தலைமை இருவரையும் அழைத்துப் பேச முயன்றும் இருவரும் வராமல் தவிர்ப்பதால் பாஜக பெரும் சி்க்கலில் இருக்கிறது

சவுரஷ்டிராவில் பாஜக முன்னாள் எம்எல்ஏ அரவிந்த் லடானிக்கு இந்த முறையும் பாஜக மேலிடம் சீட் வழங்கவில்லை. இதனால் அதிருப்தியில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். அதேபோல அம்ரேலியில் உள்ள சாவர்குந்தலா தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த மகேஷ் கஸ்வாலுக்கு சீட் வழங்காமல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதாப் துஹத்துக்கு சீட் வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்து சுயேட்சையாக களமிறங்கஉள்ளார்.

பாஜக அதிருப்தியாளர்கள் பலரும் சுயேட்சையாக களமிறங்கினால், பல இடங்களில் அந்தக் கட்சியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கும். இது ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமையும் என்பதால், அதிருப்தியாளர்களை அழைத்து சமாதானம் பேச பாஜக மேலிடம் அழைத்துள்ளது. 

click me!