Gujarat Election 2022:குஜராத் தேர்தல்: வட்கம் தொகுதியில் ஜிக்னேஷ் மேவானியை களமிறக்குகிறது காங்கிரஸ் கட்சி

By Pothy RajFirst Published Nov 14, 2022, 2:54 PM IST
Highlights

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வட்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஜிக்னேஷ் மாவேனியை காங்கிரஸ்கட்சி களமிறக்குகிறது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வட்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஜிக்னேஷ் மாவேனியை காங்கிரஸ்கட்சி களமிறக்குகிறது.

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும், சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய இரு தேதிகளில் இரு கட்டங்களாக நடக்கிறது. டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

காதலியை 35 துண்டுகளாக வெட்டிய கொடூரம்! பிரிட்ஜில் வைத்து ஒவ்வொரு பீஸாகப் புதைத்த இளைஞர் டெல்லியில் கைது

குஜராத் தேர்தலில் இந்த முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், பாஜகவுடன், ஆம் ஆத்மி கட்சியும் மல்லுக்கு நிற்கிறது. காங்கிரஸ் கட்சி படிப்படியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இதுவரை 4 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி 5வது வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தார்கள்.
இதில் வட்கம்(எஸ்சி)தொகுதியில் ஜிக்னேஷ் மேவானியை களமிறக்குகிறது காங்கிரஸ் கட்சி. இதுவரை 142 தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 

குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு புதிய சிக்கல்!சுயேட்சையாக களமிறங்கும் அதிருப்தியாளர்கள்

மோர்பி தொகுதியில் ஜெயந்தி ஜெராஜ்பாய், ஜாம்நகர் கிராமப்புறத்தொகுதியில் ஜிவன் கும்பார்வைத்யா, தாரங்தாரா தொகுதியில் சத்தார்சிங் குஜாரியா, ராஜ்கோட் மேற்கில் மன்சுக்பாய் கலாரியா, கரியாதார் தொகுதியில் திவ்யேஷ் சவாடா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

கடந்த 4ம் தேதி காங்கிரஸ் கட்சி 43 பேர் கொண்டமுதல் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது. சனிக்கிழமையன்று 4வது வேட்பாளர்கள் பட்டியலில் 9 பேர் அடங்கியிருந்தார்கள், நேற்று 5வது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. இந்த மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி கடந்த இரு தேர்தலிலும் கடுமையாகப் போராடியும் பலன் அளிக்கவில்லை. இந்தமுறையும் காங்கிரஸ் கட்சியின் முயற்சிபலிக்குமா என்பது தெரியவில்லை.

ஜி20 உச்சி மாநாட்டில் உணவுப் பாதுகாப்பு,சுற்றுச்சூழல் பற்றி ஆலோசிப்பேன்:பிரதமர் மோடி அறிவிப்பு

அதேநேரம், காங்கிரஸில் இருந்துவிலகி வந்தவர்கள் பலருக்கும் பாஜக இந்த முறை தேர்தலில் சீட் வழங்கியுள்ளது. ஏற்கெனவே இருக்கும் பலருக்கும் சீட் மறுத்ததால் அதிருப்தியாளர்கள் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்யும் முடிவெடுத்துள்ளனர். இவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக தலைமை களமிறங்கியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியும் குஜராத் மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசியுள்ளது. காங்கிரஸ், பாஜகவுக்கும் கடும் போட்டியாக ஆம் ஆத்மி இருக்கும் எனத் தெரிகிறது

click me!