அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோலுக்கு தேவையே இல்லை.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

By Raghupati R  |  First Published Jul 10, 2022, 12:33 PM IST

வாகனங்களுக்கான பெட்ரோல் தேவையை, பசுமை எரிபொருட்கள் இன்னும் 5 ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வரும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.


மகாராஷ்டிரா மாநிலம், விதர்பா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘மாற்று எரிசக்தியை நோக்கி நாடு பயணித்து வரும் சூழலில் இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தேவை இருக்க வாய்ப்புகள் இல்லை. விதர்பா பகுதியில் பயன்படுத்தப்படும் பயோ எத்தனால் மூலம் வாகனத்திற்கான எரிவாயுவை தயாரிக்கலாம். 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு.. நடிகையை ஏமாற்றிய புகார்.. எஸ்கேப் ஆன முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன்.!

ஆழ் கிணறு நீர் மூலம் பசுமை ஹைட்ரஜன் தயாரித்து ஒரு கிலோ ரூ.70க்கு விற்க முடியும். இத்தனை நாள் உணவு தயாரித்து வழங்கி வந்த விவசாயிகள் இனி எரிசக்தியையும் தயாரித்து வழங்கும் காலம் உருவாகியுள்ளது. நாட்டில் மாற்று எரிசக்திகளின் பயன்பாட்டில் முன்னுதாரணமாக மகாராஷ்டிரா விளங்க வாய்ப்புள்ளது. எத்தனால், மெத்தனால், பயோ-டீசல், பயோ சிஎன்ஜி, கிரீன் ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். 

மேலும் செய்திகளுக்கு.. கோத்தபய ராஜபக்சே சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா..! வைரலாகும் தகவல்

ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.115ஆக உள்ள நிலையில், ஒரு லிட்டர் எத்தனாலின் விலை ரூ.64 இருப்பதன் மூலம் பொது மக்களுக்கு எத்தனால் மிக மலிவான எரிசக்தியாக அமையும். அடுத்தாண்டு ஏப்ரல் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டில் 20 சதவீதம் எத்தனால் கலந்து பயன்படுத்தும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்யவுள்ளது என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு.. திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் திடீர் ரத்து.. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல் !

click me!