கர்நாடகாவில் பந்த்.! தமிழக எல்லையில் பதற்றம்- நிலைமையை கண்காணிக்க மாவட்ட எஸ்பிகளுக்கு டிஜிபி உத்தரவு

By Ajmal Khan  |  First Published Sep 29, 2023, 8:20 AM IST

கர்நாடகாவில் இன்று பந்த் நடைபெற்று வரும் நிலையில், எல்லை பகுதிகளில் தமிழக பதவு எண் கொண்ட வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நோதனை சாவடிகளில் உயர் போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  
 


கர்நாடகாவில் பந்த்- எல்லையில் பதற்றம்

காவிரியில் தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை கர்நாடக அரசு தர மறுத்து வருகிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.  அப்போது தமிழகத்திற்கு 3ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் அறிவுறுத்தியது. ஆனால் கர்நாடகவில் உரிய தண்ணீர் இல்லாத காரணத்தால் தண்ணீர் திறந்து விட முடியாது என மறுத்து விட்டது. இந்தநிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெங்களூரில் மட்டும் பந்த் நடைபெற்றது. இன்று கர்நாடக மாநிலம் முழுவதும் பந்த் நடைபெறுகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லை பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. 

Latest Videos

undefined


எல்லைகளில் கண்காணிப்பு

தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் தமிழக எல்லை பகுதியில் நிறுத்தப்படுகிறது. அதே நேரத்தில் மற்ற மாநில பதிவு எண் கொண்ட வாகங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. இந்தநிலையில் இது தொடர்பாக தமிழக டிஜிபி வெளியிட்ட அறிக்கையில்,  காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனையில் மாண்புமிகு உச்சநீதி மன்றம் தமிழ்நாட்டுக்கு காவிரி நதி நீர் தர உத்தரவு பிறப்பித்ததின் தொடர்ச்சியாக கர்நாடகத்தில் பல்வேறு கன்னட அமைப்புகள் செப்டம்பர் 29ஆம் தேதி 24 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிய வருகிறது. இது சம்மந்தமாக கர்நாடக மாநில எல்லை மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, மற்றும் நீலகிரி ஆகிய மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரு மாநில போலீசார் ஆலோசனை

பயணிகள் பேருந்து போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து தொடர்பாக உள்ளுர் நிலைமைக்கேற்ப கர்நாடக அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பொதுமக்கள் எவ்விதத்திலும் பாதிக்கபடா வண்ணம் நடவடிக்கை எடுக்க தகுந்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சோதனைச்சாவடிகளிலும் உயர்அதிகாரிகளின் தலைமையில் கூடுதல் காவலர்களை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இருமாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் இதர சந்தேகங்களை பொதுமக்கள் நிவர்த்தி செய்துகொள்ள தொடர்பு அலுவலகமாக கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்பிரிவு அலுவலகம் செயல்படும். பொதுமக்கள் தெடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் 9498170430, 9498215407.

இதையும் படியுங்கள்

கர்நாடகா பந்த்: பெங்களூருவில் 144 தடை உத்தரவு!

click me!