தற்கொலை குறித்து கூகுளில் தேடிய நபர்.. 2 மணிநேரத்தில் உயிரை காத்த போலீசார் - சினிமாவை மிஞ்சும் பரபரப்பு!

By Ansgar R  |  First Published Sep 28, 2023, 5:54 PM IST

இளம் வயதில் பலருக்கு தற்கொலை எண்ணங்கள் வருவது இப்பொது சர்வ சாதாரணமாகிவிட்டது என்று தான் கூறவேண்டும். தற்கொலை என்பது எதற்குமே தீரவில்லை என்பதை அவர்கள் உணரவேண்டும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது ஒரு பரபரப்பான சம்பவம். 


கூகுளில் "தற்கொலை மூலம் இறப்பதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருந்த" மும்பையின் வடக்குப் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவர், அமெரிக்காவைச் சேர்ந்த, தற்கொலைகளைத் தடுக்க பயன்படும் ஒரு Search Engine மூலமாகவும், இன்டர்போல் மற்றும் மும்பை போலீசார் உதவியாலும் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் துறையினரின் கூற்றுப்படி, மும்பை மாநகரின் வடக்கு புறநகரில் தான் அந்த நபர் வசித்து வருகின்றார். வேலை கிடைக்காமல் போராடி வந்ததாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தனது தாயை ஜாமீனில் எடுக்க பணம் இல்லாத காரணத்தாலும் அந்த நபர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். 

Latest Videos

undefined

குற்றவாளிகளுடன் பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தப்பட்ட வழக்கறிஞர்.. டார்ச்சர் செய்த 3 போலீஸ் கைது

தற்கொலைத் தடுப்பு நடவடிக்கையாக, இணையத்தில் இதுபோன்ற தேடல்கள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம், கூகுள் அமெரிக்காவின் இன்டர்போலின் மையப் புள்ளியான அமெரிக்காவின் தேசிய மத்திய பணியகத்திற்கு (NCB) தெரிவிக்கிறது. மும்பையின் காவல்துறை இணை ஆணையர் (குற்றம்), மும்பைக்கான அதிகாரப்பூர்வ இன்டர்போல் தொடர்பு அதிகாரி (ILO) ஆவார். அவர் இன்டர்போல் மூலம் குற்றப் பிரிவுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்களுக்கு உடனடியாக பதில் அளிக்கிறார். 

இந்த சூழலில் தான் அந்த நபர் தற்கொலை குறித்து தேடுதல்களை மேற்கொண்டது தெரியவந்தது, இதனையடுத்து ஐபி முகவரியின் அடிப்படையில், போலீஸார் செவ்வாய்க்கிழமை, தற்கொலை குறித்து தேடிய அந்த நபரை கண்டுபிடித்தனர். அந்த நபர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்றும், மும்பை அருகே தனது உறவினர்களுடன் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்தவர் என்றும் போலீஸார் விசாரணையில் கண்டுபிடித்தனர்.

மும்பையில் வசித்த அவரது தாயார், கடத்தல் தடுப்புச் சட்டத்தின் (PITA) கீழ் ஒரு வழக்கு தொடர்பாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டிப்ளமோ படித்துள்ள அந்த நபர் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையை இழந்துள்ளார்.

அதன் பிறகு வேலை கிடைக்க அவர் சிரமப்பட்ட நிலையில், அவர் தனது தாயாரை ஜாமீனில் எடுக்க பணம் சேகரிக்க முடியவில்லை. இந்தக் காரணங்களால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தற்கொலை செய்துகொள்ள நினைத்துள்ளார்” என்று அந்த அதிகாரி கூறினார்.

அதிகாரியின் கூற்றுப்படி, பிரச்சனைகள் தற்காலிகமானவை மற்றும் எளிதில் தீர்க்கப்படும் என்று போலீசார் குழு அந்த நபருக்கு ஆலோசனை வழங்கியது என்றும். பின்னர் அவரது உறவினருக்கு தகவல் தெரிவித்து அந்த நபரை கவனித்துக் கொள்ளுமாறு கூறினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையும் அந்த நபரிடம் வேலை தேட உதவுவதாக கூறியுள்ளனர் என்பது குறிபிடித்தக்கது.

இந்தியாவின் ஹீரோக்கள் ஒன்றிணைந்த தருணம்! காணொளி காட்சியில் நிகழ்ந்த அபூர்வமான சந்திப்பு!

click me!