Asianet News TamilAsianet News Tamil

குற்றவாளிகளுடன் பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தப்பட்ட வழக்கறிஞர்.. டார்ச்சர் செய்த 3 போலீஸ் கைது

பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் செப்டம்பர் 14-ம் போலீசாரை தாக்கியதாக வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு வழக்கறிஞர் சித்ரவதை செய்யப்பட்டு சக குற்றவாளியுடன் பாலியல் உறவில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். 

force lawyer into sex with co-accused in custody... 3 Punjab cops arrested
Author
First Published Sep 28, 2023, 2:56 PM IST

வழக்கறிஞரை சக குற்றவாளியுடன் வலுக்கட்டாயமாக பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்திய 3 போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் செப்டம்பர் 14-ம் போலீசாரை தாக்கியதாக வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு வழக்கறிஞர் சித்ரவதை செய்யப்பட்டு சக குற்றவாளியுடன் பாலியல் உறவில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டை விசாரிக்க 4 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இதையும் படிங்க;- கார்ல கடத்தி என்ன மூணு பேரும் நாச செஞ்சுட்டாங்க.. தாயிடம் கதறிய மகள்.. இறுதியில் நடந்தது என்ன? 

இதனையடுத்து, வழக்கறிஞரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்கத்தின் பிரதிநிதிகள், முதலமைச்சர் பகவந்த் மான்னை சந்தித்து மனு அளித்தனர். இதனையடுத்து, எஸ்.பி. புல்லர், இன்ஸ்பெக்டர் ராமன் குமார் காம்போஜ், கான்ஸ்டபிள் ஹர்பன் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios