இந்தியாவில் அதிகம் பேசப்படும் டாப் 10 மொழிகள்! நம்ம தமிழ் மொழி எந்த இடம் தெரியுமா?

By SG Balan  |  First Published Jul 22, 2024, 8:40 PM IST

மகத்தான பன்முகத்தன்மை கொண்ட நாடான இந்தியாவில் அதிகம் பேசப்படும் முதல் 10 மொழிகள் எவை என்று இத்தொகுப்பில் பார்க்கலாம்.


இந்தியா மகத்தான பன்முகத்தன்மை கொண்ட நாடாக உள்ளது. வெவ்வேறு மாநிலங்களில் மக்களின் தாய்மொழி வேறாக உள்ளது. சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் அதிகம் பேசப்படும் முதல் 10 மொழிகள் எவை என்று இத்தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தி:

Latest Videos

undefined

52.8 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். இதுதான் இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழியாக முதலிடத்தில் உள்ளது. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ மொழியாகவும், உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் உட்பட பல வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் முதன்மை மொழியாகவும் உள்ளது.

வங்காளம்:

9.7 கோடிக்கும் அதிகமானவர்கள் பேசும் வங்காள மொழி இந்தியாவில் அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாகும். இது பெரும்பாலும் மேற்கு வங்க மாநிலத்திலும் வடகிழக்கு மாநிலங்களிலும் பேசப்படுகிறது. வங்காள மொழி வளமான இலக்கிய பாரம்பரியத்திற்காக புகழ்பெற்றது. நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் உள்பட பல மகத்தான எழுத்தாளர்கள் வங்காளத்தில் எழுதியுள்ளனர்.

இந்த வசதிகள் அனைத்தும் இலவசம் தான்... ரயிலில் பயணம் செய்யும் போது யூஸ் பண்ணிக்கோங்க!

மராத்தி:

8.3 கோடிக்கும் அதிகமான மக்கள் பேசும் மராத்தி மகாராஷ்டிராவின் அதிகாரப்பூர்வ மொழியாகும். இது அண்டை மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கையில் பேசப்படுகிறது. மராத்தி இலக்கியமும் சினிமாவும் பரவலாகப் பாராட்டைப் பெற்றுள்ளது.

தெலுங்கு:

8.1 கோடி மக்களால் பேசப்படும் தெலுங்கு முதன்மையாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் முதன்மை மொழியாகப் பேசப்படுகிறது. தெலுங்கு மொழி கவிதைகளுக்குப் பெயர் பெற்றது.

தமிழ்:

6.9 கோடிக்கும் அதிகமான மக்கள் பேசும் தமிழ் மொழி, தமிழ்நாடு மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பேசப்படுகிறது. இலங்கை மற்றும் சிங்கப்பூரிலும் தமிழ் அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது. இலக்கியம் மற்றும் பண்பாட்டுச் செழுமை கொண்ட தமிழ் உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாகும். செம்மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தி:

5.5 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் குஜராத்தி, குஜராத் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழி. இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் வசிப்பவர்களில் குஜராத்தியைப் பேசுபவர்கள் அதிகமாக உள்ளனர். குஜராத்தி இலக்கியம் மற்றும் உணவு வகைகள் புகழ்பெற்றவை.

எக்ஸில் எலான் மஸ்க்கின் இன்னொரு சேட்டை! இனிமே அந்த மாதிரி ரிப்ளைக்கு சான்சே இல்ல!

உருது:

உருது 5 கோடிக்கும் அதிகமானவர்களால் பேசப்படும் மொழி. இந்தியா முழுவதும் உருது பேசுவோர் உள்ளனர். குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கத்தில் பரவலாக பேசப்படுகிறது.

கன்னடம்:

4.3 கோடிக்கும் அதிகமான மக்கள் பேசும் கன்னடம் கர்நாடகாவின் அதிகாரப்பூர்வ மொழியாகும். இந்த மொழி வளமான இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான கன்னட மொழித் திரைப்படங்களைத் தயாரிக்கும் துடிப்பான திரைப்படத் துறையின் தாயகமாக கர்நாடகா உள்ளது.

ஒடியா:

3.7 கோடிக்கும் மேலானவர்கள் பேசும் ஒடிய மொழி ஒடிசா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழி. நீண்ட வரலாறு மற்றும் இலக்கிய பாரம்பரியம் கொண்டது. ஒடிய இலக்கியமும் பாரம்பரிய இசையும் ஒடிசாவின் முக்கியமான கலாச்சார அடையாளங்களாக உள்ளன.

மலையாளம்:

3.4 கோடிக்கும் அதிகமான மக்கள் பேசும் மலையாளம், முதன்மையாக கேரள மாநிலத்திலும், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களிலும் பேசப்படுகிறது. வளமான இலக்கிய பாரம்பரியத்திற்காக அறியப்பட்ட மலையாளம், செழிப்பான திரைப்படத் துறையையும் கொண்டுள்ளது.

16 வயசு ஆகிருச்சா? மாதம் ரூ.3,000 வருமானம் கொடுக்கும் மத்திய அரசின் திட்டத்தில் சேருங்க!

click me!