அனாதையாக இறப்பவர்களின் இறுதி சடங்குகளை செய்யும் இளம் பெண்கள் ... குவியும் வாழ்த்துகள்!!

By sathish kFirst Published Jul 31, 2019, 5:36 PM IST
Highlights

அனாதையாக இறப்பவர்களின் சடலங்களை வாங்கி இறுதி சடங்குகளை செய்து அடக்கம் செய்யும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பெண்களுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து குவிந்து வருகிறது.

அனாதையாக இறப்பவர்களின் சடலங்களை வாங்கி இறுதி சடங்குகளை செய்து அடக்கம் செய்யும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பெண்களுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து குவிந்து வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரில்  செயல்பட்டுவரும் புனியாட் பெட்டியன் என்ற அறக்கட்டளையில் உள்ள பெண்கள் இணைந்து இந்த பணிகளை செய்து வருகின்றனர். ராய்ப்பூர் பகுதியில் அனாதையாக இறந்து, மருத்துவமனையிலிருந்து உடலை வாங்க யாரும் வராத ஆதரவற்றவர்களின் இறுதி சடங்குகள் முழுவதையும் இவர்களே செய்கின்றனர்.

இதுபற்றி கூறிய அந்த அமைப்பின் தலைவர் நிம்மி, நாங்க எல்லோரும் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே இந்த அமைப்பை தொடங்கினோம். அப்போது தான் தங்கள் இறுதி சடங்குகளைச் செய்ய கூட யாரும் இல்லாத பலரும், அனாதை பிணங்களாக விடப்படுவதை நாங்கள் கண்டோம். அந்த மாதிரியான மக்களுக்குத்தான் எங்கள் உதவி மிகவும் தேவை என்பதை நாங்கள் உணர்ந்தோம். 

இறந்தவர்களை முறையாக தகனம் செய்து அவர்களுக்கான இறுதி அஞ்சலியை செய்வதை மிகப்பெரிய விஷயமாக நாங்கள் பார்க்கிறோம் என கூறியுள்ளார். இந்த அமைப்பின் உதவியோடு பெண்கள் செய்யும் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

click me!