மானத்தை பெரிதாக நினைத்த அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரது உடல் அவரது தந்தையின் எஸ்டேட்டில் தகனம் செய்யப்பட உள்ளது.
காஃபி டே உரிமையாளர் சித்தார்த்தாவின் உடல் கர்நாடகா மாநிலத்தில் சிக்மங்களூரில் உள்ள அவரது தந்தையின் எஸ்டேட்டில் தகனம் செய்யப்பட உள்ளது என்று சிருங்கேரி எம்.எல்.ஏ.ராஜகவுடா கூறியுள்ளார்.
undefined
சித்தார்த்தாவின் அப்பாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட வேண்டும் என அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து முடிவு செய்துள்ளனர். கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும்,'கஃபே காபி டே' நிறுவனத்தின் உரிமையாளருமான வி.ஜி.சித்தார்த்தா திங்கள் இரவு முதல் மாயமான நிலையில், தொடர்ந்து, 36 மணி நேரம் நடந்த தீவிர தேடுதலுக்கு பின்னர் இன்று காலை 6.30 மணி அளவில் மீனவர்களால் அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.
சமீபத்தில் சித்தார்த்தா 'லாபகரமான தொழிலை உருவாக்குவதில் தோல்வியடைந்து விட்டேன்' என தன் காஃபி டே ஊழியர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், “37 வருடங்களுக்குப் பிறகு 30,000 நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி, சிறந்த முறையில் இருந்தபோதிலும் சரியான லாபகரமான வணிகத்தை உருவாக்கத் தவறிவிட்டேன் எனத் தெரிவித்து இருந்தார்.
கடந்த 2017 செப்டம்பர் மாதம் சித்தார்த்தாவின் அலுவலகம் வருமான வரித்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவரது குடும்பம் கடந்த 130 ஆண்டுகளுக்கு மேலாக காஃபி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் மிகப்பெரிய காஃபி பீன் ஏற்றுமதியாளர்களில் இவரும் ஒருவர். 8 ஆயிரம் கோடி ரூபாயை வங்கிகளில் கடனாக வைத்துள்ளார். ஆனால், அவருக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன. ஆனால், மானத்தை பெரிதாக நினைத்த அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரது உடல் அவரது தந்தையின் எஸ்டேட்டில் தகனம் செய்யப்பட உள்ளது.