ரூ.24 ஆயிரம் கோடி பணம் வைத்திருந்தும் ரூ 8 ஆயிரம் கோடி கடனுக்காக உயிரை மாய்த்துக் கொண்ட காஃபி டே சித்தார்த்தா..!

By Thiraviaraj RMFirst Published Jul 31, 2019, 11:18 AM IST
Highlights

24 வங்கிகளில் இருந்து சித்தார்த்தா ரூ.8 ஆயிரம் கோடி கடன் பெற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் சித்தார்த்தாவின் சொத்து மதிப்பு அவர் கடன் வாங்கியுள்ள தொகையைவிட 3 மடங்கு அதிகம்.

கர்நாடக மாநில முன்னாள் முதவர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் காபிடே உரிமையாளர் சித்தார்த்தா. அவர் கடன் பிரச்னை காரணமாக மாயமாகி விட்டதாகக் கூறப்பட்ட நிலையில் அவரது உடல் சடமலாக மீட்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு ரூ.8 ஆயிரம் கோடி கடன் இருப்பதாகவும், அவர் எந்தெந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியிருந்தார் என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றன.

அதன்படி, ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ.4,475 கோடியும், ஆக்சிஸ் டிரஸ்டி லிமிடெட் - ரூ.915 கோடியும் கடனாகப் பெற்றுள்ளார். ஆக்சிஸ் வங்கி - ரூ.315 கோடி. ஆதித்யா பிர்லா பைனான்ஸ் லிமிடெட் - ரூ.278 கோடி, எஸ் வங்கி ரூ.273 கோடியும் அவர் கடனாகப் பெற்றுள்ளார். பிரமால் டிரஸ்ட் சிவ் சர்வீஸ் லிமிடெட் - ரூ.175 கோடி, ஆர்.பி.எல் வங்கி - ரூ.174 கோடியும், இ.சி.எல். பைனான்ஸில் ரூ.150 கோடி.

ஸ்டேண்டர்ட் சார்டெட் லோன்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட் - ரூ.150 கோடியும், கிளிக்ஸ் கேபிடலில் ரூ.150 கோடி, ஆக்சிஸ் பைனான்ஸ் லிமிடெட் - ரூ.125 கோடி. கோடெக் மகிந்திரா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் - ரூ.125 கோடி. ஏ.கே.கேபிட பைனான்ஸ் - ரூ.121 கோடி. எஸ்.டி.பி.ஐ. பைனான்ஸ் - ரூ.100 கோடி. ரோபோ இன்டியா பைனான்ஸ் லிமிடெட் - ரூ.80 கோடி. சப்ரோஜி பல்லோஞ்சி பைனான்ஸ் லிமிடெட் - ரூ.80 கோடி. விஸ்திர ஐ.டி.சி.எல். லிமிடெட் - ரூ.75 கோடி. ஸ்ரீராம் பைனான்ஸ் - ரூ.50 கோடி.

பஜாஜ் பைனான்ஸ் - ரூ.45 கோடி உள்ளிட்ட மொத்தம் 24 வங்கிகளில் இருந்து சித்தார்த்தா ரூ.8 ஆயிரம் கோடி கடன் பெற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் சித்தார்த்தாவின் சொத்து மதிப்பு அவர் கடன் வாங்கியுள்ள தொகையைவிட 3 மடங்கு அதிகம், அதாவது ரூ.24 ஆயிரம் கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

சித்தார்த்தா தனது கடன் பிரச்சினை, மனவேதனை, கடன் கொடுத்தவர்கள் தரும் தொந்தரவுகள் குறித்து தனது நண்பர்கள் மற்றும் தனக்கு நெருங்கியவர்களிடம் மட்டும் சொல்லி மனமுடைந்து வாழ்ந்து வந்தார் என்று கூறப்படுகிறது. இவ்வளவு கடன் பிரச்சினையில் சிக்கித் தவித்த சித்தார்த்தா உலகம் முழுவதும் கிளைகளை கொண்டுள்ள தனக்கு சொந்தமான 12 ஆயிரம் ஏக்கர் காபி எஸ்டேட் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு ரூ.8,200 கோடி லாபம் ஈட்டி இருந்தார்.

அதனால் அவர் அந்த ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட மிகச்சிறந்த தொழில் அதிபர்களின் பட்டியலில் சிறப்பிடம் பிடித்திருந்தார்.

click me!