Hindu: ‘இந்து’ என்ற வார்த்தைக்கு அசிங்கமான அர்த்தம்: கர்நாடக காங்கிரஸ் தலைவர் பேச்சால் சர்ச்சை

By Pothy RajFirst Published Nov 8, 2022, 11:35 AM IST
Highlights

இந்து என்ற வார்த்தை பெர்சியாவில் இருந்து வந்தது, அதற்கு அசிங்கமான அர்த்தம் இருக்கிறது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் சதீஸ் ஜர்ஹிகோலி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்து என்ற வார்த்தை பெர்சியாவில் இருந்து வந்தது, அதற்கு அசிங்கமான அர்த்தம் இருக்கிறது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் சதீஸ் ஜர்ஹிகோலி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சதீஸ் ஜர்கிஹோலி பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

இமாச்சல் தேர்தலுக்கு முன்பாக கூட்டமாக பாஜகவில் சேர்ந்த 26 காங்கிரஸ் நிர்வாகிகள்

காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராகவும் யமகண்மார்டி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் சதீஸ் ஜர்ஹிகோலி. பெஹாவியில் ஞாயிற்றுக்கிழமை மனவ் பந்துவ்தா வேதிகா என்ற அமைப்பு சார்பில், நடந்த நிகழ்ச்சியில் சதீஸ் ஜர்ஹிகோலி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. 

அவர் பேசியதாவது “ இந்துதர்மத்தைப் பற்றி பேசுகிறார்கள். இந்து என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது. இந்த வார்த்தை நம்முடையதா. இந்த வார்த்தை பெர்சியாவில் இருந்து வந்தது.பெர்சியா என்பது ஈரான், ஈராக்,கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தானில் உள்ளது. இதற்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு என்ன. பின் எவ்வாறு இந்து வார்த்தை உங்களுடையதாகும், இது குறித்து விவாதம் தேவை.

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கை முடக்குங்கள்: நீதிமன்றம் உத்தரவு

இணையத்தில் தேடிப் பாருங்கள், இந்து என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியும். இந்து என்ற வார்த்தைக்கு பெர்சியாவில் அசிங்கமான அர்த்தம் இருக்கிறது. அர்த்தத்தை புரிந்தால் வெட்கப்படுவீர்கள்.

இந்து என்ற வார்த்தையும், மதமும் மக்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆரோக்கியமான வாதம் தேவை. இந்தியா குறித்து ஏராளமான நூல்கள் வந்திருந்தாலும், இந்து வார்த்தை குறித்து பெரிதாக இல்லை. பெரும்பாலானவர்களுக்கு இந்தியாவின் வரலாறு குறித்த புரிதல் இல்லை, தெரிந்திருக்கவில்லை. அதனால்தான் புத்தர், அம்பேத்கர், பசவேஸ்வராவின் சிந்தனைகளை வீடுகளில் பின்பற்றுகிறோம். 

ஒவ்வொரு மனிதரையும் மனிதராக நடத்த வேண்டும். ஒரு தலித் தண்ணீரைத் தொட்டால் புனிதத்தன்மை கெட்டுவிடுகிறது, ஆனால், ஒரு எருமைமாடு அதைக் குடித்தால் அது உயர் சாதியினருக்கு பிரச்சினையில்லை. எங்கள் போராட்டம் என்று வேறுபடுத்துவதற்கு எதிராகத்தான். நாம் கோயில் கட்டினோம், கோயிலுக்கு நன்கொடை கொடுத்தோம். ஆனால் கோயில் கட்டி முடித்ததும், உள்ளே செல்ல தடை விதிக்கப்படுகிறது. சமஉரிமை கோரி்த்தான் போராடுகிறோம்.

10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு காரணமே காங்கிரஸ் தான்.. காங்கிரஸ் கட்சி வரவேற்பு !

இவ்வாறு சதீஸ் ஜர்கிஹோலி தெரிவித்தார்.

சதீஸ் ஜர்கிஹோலி பேசியதற்கு காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில் “ சதீஸ் ஜர்கிஹோலி பேசிய வார்த்தை வேதனையை ஏற்படுத்துகிறது.

அனைத்து மதங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் சமமான மரியாதை அளித்துதான் தேசத்தை காங்கிரஸ் எழுப்பியுள்ளது.இதுதான் இந்தியாவின் சாரம்சம். சதீஸ் பேசிய வார்த்தைகள் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்துகிறது, இதை ஏற்க முடியாது. இதைக் கண்டிகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்

தனது பேச்சை நியாயப்படுத்தி சதீஸ் ஜர்கிஹோலி நேற்று அளித்த பேட்டியில் “ நான் இந்து மதம் குறித்து பேசியது என்னுடைய கருத்தல்ல. இந்து என்ற வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ள, பெர்சிய மொழியிலிருந்து வந்தது. பல நூல்கள், இணையதங்கள், விக்கிபீடியா ஆகியவற்றில் இருந்து படித்துதான் நான் பேசினேன் என்னுடைய சொந்த கருத்து அல்ல. இது தொடர்பாக ஆரோக்கியமான விவாதம் நடத்தலாம்” எனத் தெரிவித்தார்


 

click me!