கேஜிஎப்-2 திரைப்படத்தின் பாடலை அனுமதியின்றி பாரத் ஜோடோ யாத்திரையில் பயன்படுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கை முடக்குமாறு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேஜிஎப்-2 திரைப்படத்தின் பாடலை அனுமதியின்றி பாரத் ஜோடோ யாத்திரையில் பயன்படுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கை முடக்குமாறு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்ஆர்டி மியூசிக் என்ற நிறுவனத்தின் மேலாளர் எம். நவீன் குமார் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி உள்பட 3 பேருக்கு எதிராக இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.
இதில் கன்னடத்தில் சூப்பர்ஹிட்டாக ஓடிய கேஜிஎப்-2 திரைப்படத்தின் பாடல்களை அனுமதியின்றி, காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பயன்படுத்தப்பட்டது. இது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது, இதற்கு காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்திவரும் பாரத் ஜோடோ நடைபயணம், கர்நாடக மாநிலத்திலிருந்து தெலங்கானா சென்று, அங்கிருந்து நேற்று இரவு மகாராஷ்டிரவுக்குள் நுழைந்துள்ளது. அடுத்த 20 நாட்கள் மகாராஷ்டிராவில் ராகுல் காந்தி நடைபயணம் செய்ய உள்ளார்.
10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு காரணமே காங்கிரஸ் தான்.. காங்கிரஸ் கட்சி வரவேற்பு !
பெங்களூரு பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நவீன் குமார் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிறப்பித்த உத்தரவில், “ மனுதாரர் தனது திரைப்படத்தின் உண்மையான பாடல்கள் அடங்கிய சிடி-யை நீதிமன்றத்தில் வழங்கி, அது காப்புரிமைக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சி செய்த செயல்களை ஊக்குவித்தால், மனுதாரரின் தொழிலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும், மேலும் திருட்டுத்தனத்தையும் ஊக்குவிப்பது போலாகும். ஆதலால், காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்கிவைக்க உத்தரவிடுகிறோம். காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பதிவில் உள்ள அந்த 3 வீடியோக்களையும் நீக்க வேண்டும் ” எனத் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில் “ பெங்களூரு நீதிமன்றம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், அதன் ட்விட்டர் கணக்கை முடக்கவும் பிறப்பித்த உத்தரவு குறித்தும் சமூகவலைத்தளங்கள் வாயிலாக அறிந்தோம்.
நீதிமன்ற உத்தரவு குறித்து இதுவரை எங்களுக்கு எந்தவிதமான தகவலும் இல்லை. நீதிமன்றத்தின் உத்தரவு நகலும் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் விரைவாக நிவாரணம் பெற சட்டரீதியான அனைத்து வழிகளையும் தேடுவோம்” எனத் தெரிவித்துள்ளது.