கைது செய்யப்பட்ட தமிழக மாலுமிகள்… மீட்கக்கோரி மத்திய, மாநில அரசிடம் அவர்களின் குடும்பங்கள் வேண்டுகோள்!!

By Narendran S  |  First Published Nov 7, 2022, 11:24 PM IST

கினியா கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மாலுமிகளை மீட்கக்கோரி அவர்களின் குடும்பங்கள் மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 


கினியா கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மாலுமிகளை மீட்கக்கோரி அவர்களின் குடும்பங்கள் மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கச்சா எண்ணெய் வணிகத்தில் முக்கிய நாடாக விளங்குவது மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா. அங்கு கச்சா எண்ணெய் ஏற்ற நார்வே கப்பல் ஒன்று சென்றிருந்த நிலையில் கடற்கொள்ளையர்கள் கப்பலை துரத்தியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அங்கிருந்த தப்பித்த மாலுமிகளை கினியா கடற்படையினர் கடந்த ஆகஸ்ட் 13 அன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாலுமிகளில் இந்திய மாலுமிகளும் உள்ளனர். குறிப்பாக அதில் தூத்துக்குடியைச் சேர்ந்த சேவியர் பிரிஸ்பன், சென்னையைச் சேர்ந்த ராஜன் தீபன் பாபு, சுகுமார் ஹர்ஷா ஆகிய மூன்று தமிழக மாலுமிகளும் அடங்குவர்.

இதையும் படிங்க: 12 லட்சம் கோடி UPI பரிவர்த்தனைகள்.. டிஜிட்டல் இந்தியாவில் தொடர்ந்து சரிவதற்கு காரணம் என்ன ? முழு விபரம் !

Tap to resize

Latest Videos

ஈக்வடோரியல் கினியா அதிகாரிகளால் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர், இந்திய குழுவினர் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், அவர்கள் இப்போது மேலும் விசாரணைக்காக நைஜீரியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதுக்குறித்து சென்னையை சேர்ந்த ராஜன் தீபன் பாபு, விசாரணைக்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைத்தோம், எக்குவடோரியல் கினியா அதிகாரிகள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. நார்வே எண்ணெய் கப்பலில் ஈக்குவடோரியல் கினியா கொடியை காட்டாததற்காக எங்களுக்கு 2.5 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தினோம். ஆனால் அதிகாரிகள் இப்போது சரியான ஆவணங்கள் இல்லாமல் எங்களை நைஜீரியாவுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு காரணமே காங்கிரஸ் தான்.. காங்கிரஸ் கட்சி வரவேற்பு !

எங்களுக்கு பயமாக இருக்கிறது என்றார். மேலும் இதுக்குறித்து அவரவர் குடும்பங்களுக்கு தெரியவந்ததை அடுத்து அவர்கள் அரசிடம் அவர்களை மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே சிறுபான்மையினர் நலன் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தானை அணுகியதாக கூறிய தீபன், அவர் இந்தப் பிரச்னையை வெளியுறவு அமைச்சகத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று உறுதியளித்தாக கூறினார். இந்த நிலையில் மாலுமிகளை நாடு திரும்ப அழைத்து வருவது தொடர்பாக வெளிவிவகார அமைச்சகம், எக்குவடோரியல் கினியாவில் உள்ள இந்திய தூதரகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!