
இயற்கையின் பல படைப்புகள் நம்மை தொடர்ந்து வியப்பில் ஆழ்த்துகின்றன. அந்த வகையில், கடல் மற்றும் மலை ஆகியவை தொடர்ந்து அவற்றின் அசாதாரண விஷயங்களால் தொடர்ந்து நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன. அப்படி கடலின் ஆழத்தையும், மலையின் உச்சியையும் ஒரு சேர வென்று சாதனை தமிழன் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தின் கடலோர கிராமத்தில் பிறந்த ராஜசேகர் (எ) குட்டி என்ற இளைஞர், எவரெஸ்ட் உச்சியில் ஏறி வெற்றிக்கொடி நாட்டி உள்ளார். மலையேற்ற வீரர்களுக்கு மட்டுமல்லாமல், சாதாரண மனிதர்களுக்கும் எவரெஸ்ட் சிகரத்தை அடைய வேண்டும் என்பது தான் கனவு. யார் வேண்டுமானலும் கனவு காணலாம். ஆனால் அந்த கனவை நனவாக்க ஒரு சிலருக்கும் மட்டுமே உழைப்பும் உறுதியும் வாய்க்கும்.
அப்படிப்பட்ட ஒரு நபர் தான் குட்டி. தமிழ்நாட்டின் மீனவ கடற்கரை கிராமத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் தான் குட்டி. அலை, சறுக்குப் போட்டிகளில் சர்வதேச அளவில் பல வெற்றிகளை குவித்தவர். பிட்னஸ் மற்றும் அலை சறுக்கு பயிற்சியில் இருந்த நபருக்கு திடீரென மலையேற்றத்தில் ஆர்வம் ஏற்பட்டது.
இதையும் படிங்க : ஏன் இந்த முறையும் கந்தீரவா மைதானத்தில் பதவியேற்றுக் கொண்டார் சித்தராமையா? இதுதான் ரகசியம்!
ஒரு வருட காலமாக அதற்கான பயிற்சியில் ஈடுபட்ட அவர் 6 மலை உச்சிகளில் ஏறி, தன்னை எவரெஸ்ட் கனவுக்காக தயார்ப்படுத்திக் கொண்டார். 3 மாத உடற்பயிற்சி, பனி மற்றும் குளிரை தாங்க மணாலி, சோலங், நேபாளம் போன்ற பகுதிகளில் தங்கி உடலையும் மனதையும் உறுதிப்படுத்தி கொண்ட குட்டி, ஏப்ரல் 13-ம் தேதி எவரெஸ்ட் மலையின் Base Camp-ல் பயணத்தை தொடங்கினார். 8850 மீட்டர் உயர்த்தை மே 19-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு அடைந்து தனது கனவை நிஜமாக்கினார்.
இந்த பயணத்தில் பல தடைகள், தட்பவெப்ப சூழ்நிலை, மன உறுதியை குலைக்கும் சம்பவங்கள் என பலவற்றை தாண்டி, வெற்றி பெற்றுள்ளார் குட்டி. கடந்த 2016- ஆண்டு ஊட்டியை சேர்ந்த ராணுவ வீரர் சிவக்குமார் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் தமிழர் என்ற சாதனையை படைத்தார். தற்போது மற்றோரு தமிழர் குட்டி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க : ரூ.2,000 நோட்டு அறிமுகம் செய்ததில் மோடிக்கு விருப்பமில்லை : பிரதமரின் முன்னாள் முதன்மை செயலாளர் விளக்கம்