ரூ.2,000 நோட்டு அறிமுகம் செய்ததில் மோடிக்கு விருப்பமில்லை : பிரதமரின் முன்னாள் முதன்மை செயலாளர் விளக்கம்

By Ramya s  |  First Published May 20, 2023, 4:50 PM IST

ரூ.2,000 நோட்டு அறிமுகம் செய்ததில் மோடிக்கு விருப்பமில்லை என்று பிரதமரின் முன்னாள் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.


பிரதமரின் முன்னாள் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா ரூ.2000 நோட்டு திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்பை வரவேற்றுள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இது பணமதிப்பிழப்பு நடவடிக்கை அல்ல, ரூ.2000 நோட்டு திரும்ப பெறப்படுகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, பிரதமருக்கு விருப்பமில்லாத ரூ.2,000 நோட்டை அறிமுகம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அவரது குழுவினரின் ஆலோசனையின் பேரில், அவர் 2000 நோட்டுகளை அனுமதித்தார்., ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ரூ.2,000 நோட்டுகளைப் பயன்படுத்துவதில்லை, ரூ.500, ரூ.100 போன்ற சிறிய நோட்டுகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் பிரதமர் தெளிவாக இருந்தார். ஏழைகள் பாதிக்கப்படுவதை அவர் விரும்பவில்லை

“2000 ரூபாய் நோட்டுகள் அன்றாடப் பரிவர்த்தனைகளுக்கு நடைமுறைச் செலாவணி இல்லை என்று பிரதமர் எப்போதும் நம்பினார். மேலும், இது கறுப்புப் பணத்தை உருவாக்கவும், வரி ஏய்ப்பு நடைமுறைப்படுத்தவும் உதவுகிறது. அவர் எப்போதும் குறைந்த மதிப்பை வெகுஜனங்களின் நாணயமாகக் கருதினார்.

Latest Videos

இதையும் படிங்க : G7 Summit: ஜெலன்ஸ்கியை சந்தித்தார் பிரதமர் மோடி.. ரஷ்யா-உக்ரைன் போருக்கு பிறகு நடக்கும் முதல் சந்திப்பு..

2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதன் மூலம் பிரதமரின் தெளிவான அணுகுமுறையை உறுதிப்படுத்துகிறது. 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டு, படிப்படியாக புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டு, செப்டம்பர் 30, 2023 அன்று முற்றிலுமாக நிறுத்தப்படும். பணமதிப்பு நீக்கம் பற்றிய தவறான வதந்திகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ நேற்று அறிவுறுத்தியது. மேலும் தற்போது புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் 2000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதுவரை 2000 நோட்டு செல்லும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிங்க : பிக்பாஸ் பேக்குடன் வந்த கமல் ஹாசன்.. கண்டுகொள்ளாத டி.கே. சிவக்குமார்! பார்க்காத மு.க ஸ்டாலின்

click me!