பிக்பாஸ் பேக்குடன் வந்த கமல் ஹாசன்.. கண்டுகொள்ளாத டி.கே. சிவக்குமார்! பார்க்காத மு.க ஸ்டாலின்

By Raghupati R  |  First Published May 20, 2023, 4:25 PM IST

நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் அணியும் பை போன்ற பையுடன் வந்தார்.


கர்நாடகாவில் கடந்த மே 10 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி  135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களையும், மஜத 19 இடங்களையும் , சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தது.

பாஜக படுதோல்வி சந்தித்ததை அடுத்து தனது  முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார். இதனிடையே கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார்.  இதேபோல் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.  இந்த நிலையில், சித்தராமையா பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சித்தராமையா கர்நாடக மாநில முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

Tap to resize

Latest Videos

undefined

இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின், கமல் ஹாசன் போன்ற பல தலைவர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா, கடந்த ஆண்டு மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து, அவர் எம்எல்ஏவாக பதவி வகித்து வந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்று இருந்தார். மேலும் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தான் போட்டியிடவில்லை என்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும் கமல்ஹாசன் அறிவித்தார். இதையடுத்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே நிலை தொடருமா என்ற கேள்வி எழுந்தது.

இதையும் படிங்க..2000 ரூபாய் நோட்டு: சீறிய முதல்வர் ஸ்டாலின்.! திமுகவினரின் சாராய ஆலை விவகாரத்தை தூசி தட்டும் அண்ணாமலை

இந்நிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அவரைப் போலவே மற்ற தலைவர்களும் பிரச்சாரம் செய்தபோது ஈவிகேஎஸ் இளங்கோவன் பெரும் வெற்றி பெற்றார். இந்நிலையில் கர்நாடக தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதையடுத்து, சித்தராமையா முதல்வராக அறிவிக்கப்பட்டார். பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.

பெங்களூரு காண்டீரவா ஸ்டேடியத்தில் நடந்த விழாவிற்கு கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. கமல்ஹாசன் இன்று பெங்களூர் சென்றார். கான்டீரவா மைதானத்தில் நடந்த விழாவில் கலநது கொண்டார். அப்போது அவர் முக்கால் கை கொண்ட டீசர்ட் அணிந்திருந்தார். தோளின் குறுக்கே ஒரு பையை மாட்டியிருந்தார். அப்போது கர்நாடக துணை முதல்வரான டி.கே சிவக்குமார் கமலை பார்த்து வணக்கம் வைக்கவில்லை. அதேபோல தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நடிகர் கமல் ஹாசனை பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..Video: திடீரென படியில் விழுந்து வணங்கிய கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் - ஏன் தெரியுமா?

click me!