மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

Asianet News Tamil  
Published : Sep 15, 2017, 09:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

சுருக்கம்

The Supreme Court yesterday issued notice to the central government and all state governments.

பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு, பாலியல் பலாத்காரத்தில் இருந்து பாதுகாக்க வகுப்பட்ட விதிமுறைகளை அமல்படுத்தக் கோரியும் தாக்கல் செய்ய மனுவை  ஏற்று, மத்திய அரசுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

மாணவர் கொலை

குர்கானில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் பிரதியுமான் கழிப்பறையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டான். இது தொடர்பாக பள்ளிவாகனத்தின் நடத்துனர் அசோக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் மாணவரின் தந்தை சார்பிலும், வழக்கறிஞர்கள் அபா ஆர். சர்மா, சங்கீதா சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அந்த மனுவில் குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் எந்த விதமான சமரசமும் செய்யக்கூடாது, பாலியல் பலாத்காரத்தில் இருந்து பள்ளி குழந்தைகளைக் காக்க வகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது.

திங்கள் விசாரணை

இது தவிர கடந்த மாதம் காஜியாபாத்தில் ஒரு தனியார் பள்ளியில் 9 வயது சிறுவன் மர்மமாக இறந்தான். அவனின் தந்தை அந்த இறப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

பொது நல மனு

இதற்கிடையே வழக்கறிஞர் சுஜிதா வஸ்தவா தாக்கல் செய்த பொது நல மனுவில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அதில், “ பள்ளியின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில்குழந்தைகள் மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எந்த விதத்திலும் சமரசம் செய்துக்கொள்ளக்கூடாது.

பள்ளிகளில் குழந்தைகள் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான டெல்லி ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் எனக் கோரி இருந்தார்.

பரிந்துரைகள்

இந்த பரிந்துரைகளில், ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகள் பாதுகாப்பு கொள்கை உருவாக்கப்பட வேண்டும். அந்த கொள்கை அனைத்து ஊழியர்களும் புரிந்து கொள்ளும் வகையில், எடுத்துரைக்கப்பட்டு, கையொப்பம் பெறப்பட வேண்டும்.

போலீஸ் விசாரணை

புதிதாக சேரும் அனைத்து பணியாளர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்புதொடர்பாக ஒரு மாத  பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகள் பலாத்கார தடுப்பு கண்காணிப்பு குழு உண்டாக்கி, அதில் 2 மாணவர்கள் உறுப்பினராக இருக்க வேண்டும். புதிதாக வேலைக்கு சேர்க்கும் பணியாளரை போலீசார் மூலம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

மது, புகையில் கூடாது

மேலும், பள்ளியைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு மதுக்கடைகள், புகையிலை தொடர்பானபொருட்கள் விற்கப்படும் கடைகள் இருக்க கூடாது. குற்றபின்னணி கொண்டவர்களை பணிக்கு அமர்த்தக்கூடாது உள்ளிட்ட  பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

3 வாரங்கள்

இந்த மனுக்களை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஓய். சந்திரசூட்ஆகியோர் விசாரணை நடத்தினர். அடுத்த 3 வாரங்களுக்குள் மத்திய மனித வளத்துறையும், அனைத்து மாநில அரசுகளும் , யூனியன் பிரதேசங்களும் பதில் அளிக்க தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

PREV
click me!

Recommended Stories

4.30 மணிநேரத்தில் 19 பீர்.! போட்டிபோட்டு குடித்த ஐடி ஊழியர்கள்.! தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா!
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா?