dog:streetdog: ‘தெருநாய் யாரையேனும் கடித்தால், அதற்கு உணவு கொடுப்பவர்களே பொறுப்பு’: உச்ச நீதிமன்றம் கருத்து

By Pothy RajFirst Published Sep 10, 2022, 2:46 PM IST
Highlights

தெருநாய்களுக்கு உணவு வைத்து அதை பராமரிப்பவர்கள்தான், அந்த நாய் யாரையேனும்கடித்தாலும் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள்தான் நாய்க்கு தடுப்பூசி செலுத்துவதற்கான செலவையும் ஏற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தெரு நாய்களுக்கு உணவு வைத்து அதை பராமரிப்பவர்கள்தான், அந்த நாய் யாரையேனும்கடித்தாலும் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள்தான் நாய்க்கு தடுப்பூசி செலுத்துவதற்கான செலவையும் ஏற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துவிட்டது. அதைக் கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் வி.கே.பிஜூ உச்ச நீதிமன்றத்தி் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் “ ஆகஸ்ட் மாதத்திலிருந்து கேரளாவில் நாய்கடியால் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 

காரின் பின் சீட்டிலும் ‘சீட் பெல்ட் அலாரம்’ கொண்டுவரப்படும்: நிதின் கட்கரி தகவல்

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் முன்புகூட ஒருவரை நாய் கடித்தது. சமீபத்தில் 12 வயது சிறுவன் நாய்கடியால் உயிரிழந்தார். கடந்த 2015ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உள்ளாட்சி சட்டங்கள்படி தெருநாய்கள் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்றது ஆனால், இதுவரை இல்லை” எனத் தெரிவித்தார்.

42 % இளைஞர்களுக்கு வேலை இல்லை.. அவர்களுக்காக நடக்கிறோம், வேலைக்காக நடக்கிறோம்.. ராகுல் போட்ட மாஸ் டுவிட்.

இந்தவழக்கு உச்ச நீதிமன்றநீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது, நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறுகையில் “ நான் கூட நாய்களை விரும்புவேன். இங்கு நாய்களை விரும்புவோர் ஏராளமானோர் இருக்கிறார்கள். 

ஆனால் தெருநாய்கள் பட்டினியால் வாடாமல் இருக்க அதற்கு ஏராளமானோர் உணவு வழங்குகிறார்கள். அவற்றுக்கு உணவு வழங்குவோர்தான் நாய்களுக்கு தடுப்பூசி போடும் செலவையும் ஏற்க வேண்டும். அந்த நாய்கள் மக்களில் யாரையேனும் கடித்தாலும் அதற்கான பொறுப்பேற்க வேண்டும். ஆதலால்,தெருநாய்கள் குறித்த கவலைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்.

மக்களின் உரிமைகளுக்கும், விலங்களின் உரிமைக்கும் இடையே சமநிலையை பராமரிக்க வேண்டும். அதாவதுதெருநாய்களுக்கு உணவு வைப்பவர்கள்தான் பொதுமக்களை அந்த நாய்கள் கடிக்காமல் இருக்க தடுக்க வேண்டும். பொறுப்பேற்க வேண்டும்.

ராகுல் காந்தி தங்கும் கேரவேன் எப்படி இருக்கும்? மற்ற தலைவர்களுக்கு வசதிகள் எப்படி?

தெருநாய் பிரச்சினையை ஏற்க வேண்டும். நாய்களுக்கு முறையான உணவு கிடைக்காவிட்டாலோ அல்லது நோய் தொற்று ஏற்பட்டாலோ நாய்கள் கொடூரமாகமாறிவிடும். ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட நாய்களைக் கண்டறிந்து கால்நடை பராமரிப்புதுறையால் தனியாக பாதுகாக்க வேண்டும். இந்த வழக்கை வரும் 28ம் தேதிக்கு விசாரிக்கிறோம்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்தவழக்கில் விலங்குகள் நல வாரியத்தினர் சார்பில் தங்கள் வாதங்களை விரிவாக வைத்தபின் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

கேரளாவில் தெருநாய் குறித்த பிரச்சினை, நாய் தாக்குதல், பாதிக்கப்பட்டவர்களகு்க இழப்பீடு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஸ்ரீ ஜெகன் ஆணையத்தைஅமைத்தது அந்த குழுவும் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
 

click me!