42 % இளைஞர்களுக்கு வேலை இல்லை.. அவர்களுக்காக நடக்கிறோம், வேலைக்காக நடக்கிறோம்.. ராகுல் போட்ட மாஸ் டுவிட்.

Published : Sep 10, 2022, 02:23 PM ISTUpdated : Sep 10, 2022, 02:28 PM IST
42 % இளைஞர்களுக்கு வேலை இல்லை.. அவர்களுக்காக நடக்கிறோம், வேலைக்காக நடக்கிறோம்.. ராகுல் போட்ட மாஸ் டுவிட்.

சுருக்கம்

நாட்டில் 42 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர் என்றும், அவர்களுக்காகத்தான் நாம் நடக்கிறோம் என்றும், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

நாட்டில் 42 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர் என்றும், அவர்களுக்காகத்தான் நாம் நடக்கிறோம் என்றும், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பலரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நடைபயணத்தை கேள்வி எழுப்பி வரும் நிலையில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி காங்கிரஸ்... ஆனால் இப்போது மீளமுடியாத நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது, பலமுறை நாட்டை ஆண்ட கட்சி இப்போது பல மாநிலங்களில்  காணாமல் போயுள்ளது, அதேபோல கட்சியின் மூத்த தலைவர்கள் கபில் சிபில், குலாம் நபி ஆசாத் போன்றவர்கள் அடுத்தடுத்து வெளியேறியுள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சி மீள முடியாத பள்ளத்தில் விழுந்து கிடக்கிறது. ராகுல் காந்தியோ பொறுப்பற்ற முறையில் குழந்தைத்தனமாக இருக்கிறார் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில்தான் எவரும் எதிர்பார்க்காத அளவில், இதுவரை யாரும் செய்திராத வகையில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தேசிய ஒற்றுமை நடைபயணத்தை அவர் தொடங்கியுள்ளார். செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் இதன் தொடக்க விழா நடைபெற்றது, அதில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு தேசியக் கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி பயணத்தை தொடங்கி வைத்தார்.

இதையும் படியுங்கள்: மனசாட்சியோடு திமுக யோசித்து பாருங்கள்.. அப்புறம் புரியும்.. மின் கட்டண உயர்வுக்கு எதிராக கொதிக்கும் தினகரன்.!

சுமார் 3 ஆயிரத்து 570 கிலோமீட்டர் இரண்டு மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக  இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 நாட்கள் 3500 கிலோமீட்டர் தூரத்தை ராகுல்காந்தி நடந்தே சென்று காஷ்மீரை அடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதயாத்திரையின் போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்பிக்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அதில் கலந்துகொண்டு வருகின்றனர். அவருடன் 118 பேர் இந்த 150 நாட்களும் நடைபயணத்தில் பங்கேற்கின்றனர். இதுவரை யாரும் செய்யத் துணியாத ஒரு பாதயாத்திரையை ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார். இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் உறுதியாக நம்பி வருகின்றனர்.

இந்நிலையில் நான்காவது நாளாக ராகுல்காந்தி தமிழகத்தில் நடைபயணம் இன்று  நடைபெற்று வருகிறது. அவரை பல்வேறு தரப்பினர் அமைப்பினர் சந்தித்து வாழ்த்துக் கூறி ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நாட்டை மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் பிளவுபடுத்துபவர்களை அம்பலப்படுத்த போகிறோம், அதை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லப் போகிறோம்,  நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் தேசியக் கொடியை மட்டுமே ஏந்திச் செல்ல போகிறோம்,  நாட்டில் உள்ள வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் உள்ளிட்ட மிக முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி பேசுவதே நடை பயணத்தின் முக்கிய நோக்கம் என ராகுல்காந்தி தெரிவித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: நமது விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் கொண்டாட வேண்டும்.. மத்திய - மாநில அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு..

கட்சியிலிருந்து அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் விலகி வரும் நிலையில் கட்சிக்குள் அதிருப்தி நிலவி வரும் நிலையில் ராகுல் காந்தியின் இந்த நடைபயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நடை பயணம் தொடங்குவதற்கு முன்னதாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தை  ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி, வெறுப்பு மற்றம் பிரிவினை அரசியலால் எனது தந்தையை இழந்தேன், அதுபோல எனது அன்பான நாட்டையும் இழக்க மாட்டேன் என அவர் பதிவிட்டிருந்தார்.

அத்வானி அவர்கள் நடத்திய ரத யாத்திரையை அடுத்து பாஜக ஆட்சிக்கு வந்தது, அதுபோல ராகுல்காந்தி நடத்துகிற இந்த பாதயாத்திரையை அடுத்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்பதில் காங்கிரசார் உறுதியாக உள்ளனர். மொத்தத்தில் இது ராகுல் காந்தியின் தேர்தல் வியூகம், அரசியல் ராஜதந்திரம் என்று வர்ணிக்கின்றனர். அதேபோல இந்த பயணத்தின்போது இடையிடையே ராகுல் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார், பல சுவாரஸ்ய சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது,

 

நான்காவது நாளான இந்த பாதயாத்திரையில் நடைபெற்று வரும் நிலையில், ராகுல் காந்தியை தனது டுவிட்டர் பக்கத்தில், சில இளைஞர்கள் தனக்கு ஆதரவு தெரிவித்து I am Walking for job என்ற அச்சிரடப்பட்ட டீ சர்ட் அணிந்து தன்னுடன் கூட்டமாக  வரும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளதுடன்,

நம் நாட்டில் 42 சதவீத இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகின்றனர், இளைஞர்கள் இல்லாமல் இந்த நாட்டின் எதிர்காலம் சாத்தியமா என கேள்வி எழுப்பியதுடன், நாம் அனைவருக்காகவும் நடக்கிறோம்,  நாம் வேலைக்காக நடக்கிறோம்.. என அவர் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த டுவிட்டுக்கு இதுவரை 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ரீ டுவிட் செய்துள்ளனர், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் தெரிவித்துள்ளனர். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துகொண்ட இளம்பெண்! விமரிசையாக நடத்தி வைத்த கிராம மக்கள்!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!