
ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் ஒரே வாரத்தில் 624 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பத்து நாள் கொண்டாட்டத்தில் முதல் மூன்று நாட்களில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கு அரசுக்கு மது மூலம் வருமானம் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.
தமிழகத்தைப் போலவே கேரளாவில் அரசே மதுக்கடைகளை இயக்கி வருகிறது. கிட்டத்தட்ட மது விற்பனையை மையமாக வைத்தே அம்மாநில அரசும் அரசு இயந்திரத்தை இயக்கி வருகிறது மற்ற மாநிலங்களை விட கேரளாவில் மது குடிப்போர் எண்ணிக்கை அதிகம் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தைப் போலவே அங்கும் பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் மது விற்பனை சூடு பிடிப்பது வழக்கம், அதிலும் அம்மாநிலத்தின் முதன்மை பண்டிகையான திருவோணம் பண்டிகையில் மது விற்பனை பன்மடங்கு அதிகரிப்பது வழக்கம்.
இதையும் படியுங்கள்: இசுலாமியர்கள் மீது ஏன் வன்மம்.? தலைமை செயலகத்தை சுற்று போடும் அன்சாரி.. ஆதரவாக துள்ளி குதித்து வந்த கருணாஸ்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக அங்கு ஓணம் பண்டிகை சரிவர கொண்டாடப்படவில்லை, கடந்த 2 ஆண்டுகளாக மது விற்பனை மந்தமாகவே இருந்தது. ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அங்கு வழக்கம்போல திருவோணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மது விற்பனையும் செம்மையாக சூடுபிடித்தது, அம்மாநிலத்தில் ஓணம் பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம், அதில் முதல் மூன்று நாட்களிலேயே 300 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது.
இதையும் படியுங்கள்: congress: காங்கிரஸில் தீராத குழப்பம்!தலைவர் தேர்தலை நியாயமாக,வெளிப்படையாக நடத்துங்க! 5 எம்.பி.க்கள் போர்க்கொடி
மொத்தத்தில் 10 நாட்களில் 624 கோடி ரூபாய்கள் மது விற்பனை நடந்துள்ளது. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கேரளாவில் அதிக குடிமகன்கள் இருப்பதே இந்த அபார வசூலுக்கு காரணம் என்றும், அம்மாநில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அங்கு மது குடிப்போர் எண்ணிக்கை ஆண்டு ஆண்டு அதிகரித்து வருகிறது, இதை மாநில அரசு கட்டுப்படுத்த வேண்டும் இல்லை என்றால் மது நோயாளிகள் அதிகம் கொண்ட மாநிலமாக கேரளா மாறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட சர்வேயில் மது குடிப்போர் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது அதை நிரூபிக்கும் வகையில் தான் இந்த அளவிற்கு அங்கு மது விற்பனை நடந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.