ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தில் தகுதிவாய்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு வரும் மார்ச் 15ம் தேதிக்குள் நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தில் தகுதிவாய்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு வரும் மார்ச் 15ம் தேதிக்குள் நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டை அடிப்படையாக வைத்து ஓரே பதவி ஓரே ஓய்வூதியம் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி 2014, ஜூலை 14ம் தேதி முதல் ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறையும் இந்தத் திட்டம் மறு ஆய்வு செய்யப்படும். அந்த வகையில் 2019ம் ஆண்டு ஜூலையில் மறு ஆய்வு செய்யப்பட்டது. 2019, ஜூலை முதல் 2021, டிசம்பர் 31 வரையிலான நிலுவைத் தொகை 17 சதவீத அகவிலைப்படி அடிப்படையில் கணக்கிடப்பட்டு ரூ.19,316 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கான திருத்தப்பட்ட OROP ஓய்வூதியத் திட்டத்தில் எவ்வளவு கிடைக்கும்?
2021, ஜூலை 31 முதல் டிசம்பர் 31ம் தேதிவரையிலான ஓய்வூதியம் என்பது 31 சதவீத அகவிலைப்படி அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. 2019, ஜூலை 1ம் தேதி முதல் 2022, ஜூன் 30ம் தேதிவரையிலான நிலுவைத் தொகையாக, ரூ.23,638 கோடி வழங்கப்பட உள்ளது.
ஆனால் இந்த நிலுவைத் தொகையை மத்திய அ ரசு இன்னும் வழங்கவில்லை. இதை எதிர்த்து இந்திய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து நிலுவைத் தொகையை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, மத்திய அரசு காலஅவகாசம் கேட்டுக்கொண்டதையடுத்து, உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியது. இந்நிலையில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் முன்னாள் ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் 2019, ஜூலை 1ம் தேதி முன்தேதியிட்டு மத்திய அரசு திருத்தியுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் பணப் பலன்களால், 25 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள்.
அத்திபட்டியாக மாறும் ஜோஷிமத்’: நிவாரண முகாம்களில் இருந்து மக்களை வெளியேற்றும் உத்தரகாண்ட் அதிகாரிகள்
இந்நிலையில், கடந்த மாதம் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஓர் மனுத்தாக்கல் செய்தது. அதில், ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க 2023, மார்ச் 15வரை அவகாசம் வழங்கக் கோரியது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், பிஎஸ் நரசிம்மா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரி்க்கப்பட்டது. மத்திய அ ரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி ஆஜராகினார்.
ஓய்வுபெற்ற ராணுவவீரர்கள் கூட்டமைப்பு வழக்கறிஞர்களிடம்,தலைமை நீதிபதி சந்திரசூட், “ மத்திய அரசு நிலுவைத் தொகை வழங்கும்விவகாரத்தில் காலதாமதம் நடப்பதில் ஏதேனும் பாதிக்கப்பட்டதாக உணர்கிறீர்களா அவ்வாறு உணர்ந்தால் மனுத் தாக்கல் செய்யலாம்” எனத் தெரிவித்தார்.
திருப்பதி கோயில் ஜனவரி, பிப்ரவரிக்கான சிறப்பு தரிசன டிக்கெட் இன்று வெளியீடு
அப்போது பேசிய அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி “ நிலுவைத் தொகை அனைத்தும் கணக்கிடப்பட்டு, ஒப்புதலுக்காக பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மார்ச் 15ம்தேதி நிலுவைத் தொகை ஓய்வூதியதார்ரகளின் கணக்கில் சேர்க்கப்படும் எனஉறுதியளிக்கிறேன்” எனக் கேட்டுக்கொண்டார்
இதையடுத்து, தலைமைநீதிபதி சந்திரசூட், நீதிபதி நரசிம்மா அமர்வு பிறப்பித்த உத்தரவில் “ மார்ச் 15ம் தேதிவரை மத்திய அரசுக்கு அவகாசம் தருகிறோம். அதற்குள் நிலுவைத் தொகையை ஓய்வுபெற்ற ராணுவவீரர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், தாமதம் செய்யக்கூடாது” எனத் தெரிவித்தனர்