Joshimath‘அத்திபட்டியாக மாறும் ஜோஷிமத்’: நிவாரண முகாம்களில் இருந்து மக்களை வெளியேற்றும் உத்தரகாண்ட் அதிகாரிகள்

By Pothy RajFirst Published Jan 9, 2023, 2:27 PM IST
Highlights

உத்தரகாண்டின் ஜோஷிமத் நகரம் மூழ்கும் பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து நிலச்சரிவுகள், வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், முகாம்களில் தங்கியிருக்கும் மக்களையும் அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வருகிறார்கள். 

உத்தரகாண்டின் ஜோஷிமத் நகரம் மூழ்கும் பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து நிலச்சரிவுகள், வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், முகாம்களில் தங்கியிருக்கும் மக்களையும் அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வருகிறார்கள். 

இதனால் கோஷமித் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்துக்கும், பீதிக்கும் ஆளாகியுள்ளனர். 
உத்தரகாண்ட் ஜோஷிமத் நகரில் கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து நிலச்சரிவுகளும், வீடுகளில் விரிசல்களும் ஏற்பட்டு வருகின்றன. நிலச்சரிவு, நிலநடுக்கம் ஏற்படக்கூடிய ஆபத்தான பகுதியாக மாறியுள்ளதாக புவியியில் வல்லுநர்களும் எச்சரித்துள்ளனர்.

திருப்பதியில் பக்தர்கள் தங்கும் விடுதி வாடகை உயர்வு: பாஜக கண்டனம்

இதையடுத்து, ஆபத்தான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் அரசு தங்கவைத்துள்ளது. இதற்கிடையே புவியியல் வல்லுநர்கள், நிலவியல் நிபுணர்கள், பேரிடர் மேலாண்மை துறையினர் உயர் அதிகாரிகள் ஆபத்து மிகுந்த இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

ஆனால், நாளுக்குநாள் கோஷிமத் நகரச் சூழல் மாறிக்கொண்டே வருகிறது, நிலைமையும் மோசமடைந்து வருகிறது. இதனால் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களையும் அதிகாரிகள் வெளியேற்றத் தொடங்கியுள்ளனர்.

ஜோஷிமத் நிலை என்ன? முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை

கோஷிமத் நகரில் நிலவும் சூழல் குறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர்ச ிங் தாமி தொடர்ந்து கண்காணித்து அதிகாரிளுக்கு அறிவுறுத்தி வருகிறார். மக்களை ஆபத்தான பகுதியிலிருந்து உடனடியாகவெளியேற்ற அதிகாரிகளுக்கு முதல்வர் தாமி உத்தரவிட்டுள்ளார்.

பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் தாமி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே சாமோலி மாவட்ட ஆட்சியர் ஹிமான்சு குரானா ஒவ்வொரு வீடாகச் சென்று பார்வையிட்டு, சேத விவரங்களை ஆய்வு செய்து வருகிறார்.வீடுகளில் அதிகமாக சேதம் இருந்தால் அந்த வீட்டின் உரிமையாளர்கள் உடனடியாக நிவாரண முகாமுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தகவலின்படி, ஜோமித் நகரில் 600க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. 68க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.5000 நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. 

பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி, ஹோட்டல் மவுண்ட்வியூ, மலாரி இன் ஆகியவை மறு உத்தரவுவரும்வரை செயல்படவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

ஜோஷிமத் நிலச்சரிவு: பிரதமர் அலுவலகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

ஜோஷிமத் நகரில் 229 வீடுகள் பாதுகாப்பானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன, அங்கு 1271 பேர் தங்கவைக்கப்பட உள்ளனர். இதையடுத்து, ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரையும் விரைந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துவரும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இதற்கிடையே என்டிசிபி சார்பில் தபோவன் விஷ்ணுகாத் நீர்மின்திட்டமும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. ஹோ ஹரே ஹேலங் புறவழிச்சாலை கட்டுமானமும் அடுத்த உத்தரவு வரும்வரை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய தேசிய அறிவியல் அகாடெமியின் அறிவியல் வல்லுநர் டிஎம் பானர்ஜி கூறுகையில் “ இமயமலையின் கீழடுக்கில் ஜோஷிமத்அமைந்துள்ளது. இங்குள்ள பாறைகள் அனைத்தும், காம்பிரியன் காலத்துக்கு முந்தையகாலத்தைச் சேர்ந்தவரை. நிலநடுக்கம் ஏற்படும் மண்டலத்தில் 4வது அடுக்கில் இந்தப் பகுதி உள்ளது.இந்த பகுதியில் வீடுகள், பெரிய கட்டிடங்கள் கட்டுவது ஆபத்தானது, அதிலும் 3 அல்லது 4 மாடிகள் எழுப்புவது ஆபத்தானது. அதிகமான கட்டுமானம் கட்டும்போது பாறைகள் உறுதித்தன்மையை இழந்துவிடும்” எனத் தெரிவித்தார்
 

click me!