GATE 2023 Admit Card: கேட் தேர்வு அட்மிட் கார்டு வெளியீடு: இப்பவே டவுன்லோட் பண்ணுங்க!

Published : Jan 09, 2023, 01:58 PM ISTUpdated : Jan 09, 2023, 02:01 PM IST
GATE 2023 Admit Card: கேட் தேர்வு அட்மிட் கார்டு வெளியீடு: இப்பவே டவுன்லோட் பண்ணுங்க!

சுருக்கம்

முதுநிலை பொறியியல் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான கேட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் gate.iitk.ac.in இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

Graduate Aptitude Test in Engineering (GATE) எனப்படும் கேட் நுழைவுத் தேர்வு எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற பொறியியல் பட்ட மேற்படிப்புகளில் சேர நடத்தப்படுவது ஆகும். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கலாம்.

இத்தேர்வு வரும் பிப்ரவரி 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற உள்ளது. இந்நிலையில், இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று, திங்கட்கிழமை ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

gate.iitk.ac.in என்ற இணையதளத்துக்குச் சென்று கேட் தேர்வு 2023 ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்துகொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

GATE 2023 admit card link.

தேர்வு முடிந்தபின் விடைத்தாள் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு முன் தேர்வர்களின் எதிர்வினைகள் பிப்ரவரி 15ஆம் தேதி வெளியிடப்படும். விடைத்தாள் குறித்த மறுப்புகள் இருந்தால் அதனை பிப்ரவரி 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.

தேர்வு முடிவுகள் மார்ச் 16, 2023 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும். மார்ச் 21ஆம் தேதி மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

PREV
click me!

Recommended Stories

அட்வான்டேஜ் எடுக்கும் ஸ்பைஸ்ஜெட்.. தினமும் 100 கூடுதல் விமானங்கள்.. திணறும் இண்டிகோ!
இந்தியர்களுக்கு நிம்மதி.. இண்டிகோவுக்கு செக்! புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு கிரீன் சிக்னல்