
1915ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பைக்குத் திரும்பினார். அந்த நாளை நினைவில் கொள்ளும் வகையில்தான் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டு ஒரு நகரத்தில் கொண்டாடப்படும் இந்த விழா கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு காணொளிக் காட்சி மூலம் மட்டுமே நடைபெற்றது. இந்த ஆண்டு மீண்டும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாள் விழா விமரிசையாகக் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Modi Archive: பிரதமர் மோடியின் இளமைக்கால வெளிநாட்டுப் பயணங்கள்!
விழாவில் பேசிய பிரதமர் நரேந்தி மோடி, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் நமது நாட்டுத் தூதுவர்கள் என்று குறிப்பிட்டார். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் நம் நாட்டுக்குச் செய்துள்ள நற்பணிகளை பல்கலைக்கழகங்கள் ஆவணப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.