
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூருவில் உள்ள வேதாந்த அலுவலகம் முன்பு தமிழ் மற்றும் கன்னட அமைப்பினர் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றர்.
தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், தமிழ்நாட்டையும் தாண்டி, இந்தியா முழுவதுமல்லாமல் லண்டன் பங்கு சந்தை வரை சென்றுள்ளது. லண்டனில் தமிழர்கள் தூத்துக்குடி மக்களுக்காக போராடி வருகின்றனர். இந்த நிலையில், வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் 11.52 சதவீதம் தள்ளியுள்ளனர்.
இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள வேதாந்தா நிறுவன அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கோஷங்கள் போராட்டக்காரர்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் தமிழ் மற்றும் கன்னட அமைப்புகள் பங்கேற்றுள்ளன. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும், தூத்துக்குடி கலவரத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு காரணமான ஆட்சியர் மற்றும் எஸ்.பியை கைது செய்யவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.