இறந்த தாயை அடக்கம் செய்யாமல்...! 5 மாதம் மகன்கள் செய்த கேவலமான செயல்...!

 
Published : May 24, 2018, 04:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
இறந்த தாயை அடக்கம் செய்யாமல்...! 5 மாதம் மகன்கள் செய்த கேவலமான செயல்...!

சுருக்கம்

money minded sons not buried of mother body

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி, பேலுபூர் பகுதியைச் சேர்ந்தவர் அமராவதி தேவி. சுங்கத்துறை சூப்பிரண்டாக பணியாற்றி வந்த இவருடைய கணவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து அமராவதி தேவிக்கு, மாதம் ரூ. 40,000  ஒய்வூதியமாக வந்தது. இதனை இவரது 5 மகன்களும் பிரித்து எடுத்துக்கொண்டு, அமராவதியை பார்த்துக்கொண்டனர்.

இந்நிலையில், அரமாவதி வீட்டில் இருந்து, கடந்த சில தினங்களாக துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார் வீட்டை சோதனையிட்டப்போது, ஒரு அறையில் அமராவதியின் உடல் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுப்பிடித்தனர். அவரது கை பெருவிரலில் மை கரையும் இருந்தது.

அமராவதி தேவி, கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதியே இறந்து விட்டதாகவும், அவரது விரல் ரேகையை பயன்படுத்தி, அவரது ஒய்வூதியத்தை பெரும் கேவலமான நோக்கில், 5 ந்து மகன்களும் அவரது உடலை அடக்கம் செய்யாமல், வீட்டிலேயே பதப்படுத்தி வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. 

போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

விசா தேதி முடிந்தால் தங்க முடியாதா? அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!
அவள் நரகத்துக்கே போகட்டும்.. நிதிஷ் குமாரின் செயலுக்கு ஆதரவாக பேசிய பாஜக தலைவர்!