“ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் நாட்டை பாதுகாப்பாக வைத்து இருக்கிறது’’ - முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பேச்சால் பரபரப்பு

 
Published : Jan 04, 2018, 05:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
“ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் நாட்டை பாதுகாப்பாக வைத்து இருக்கிறது’’ - முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பேச்சால் பரபரப்பு

சுருக்கம்

The responsibility of keeping the country safe is the RSS. The system is the same

அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயக அமைப்பு, ராணுவம் ஆகியவற்றுக்கு பின், நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு ஆர்.எஸ்.எஸ். அமைப்பையே சாரும் என்று உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.டி. தாமஸ் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம், கோட்டயம் நகரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. அதில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் பேசியதாவது -

மீட்ட பெருமை

நாட்டை அவசரநிலையில் இருந்து மீட்டதற்கான பெருமையை எந்த அமைப்புக்கேனும் கொடுக்க முடியுமென்றால், அதை நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குத் தான் கொடுப்பேன்.

பாம்பு விஷம்

சங்பரிவார அமைப்புகளில் உள்ள உறுப்பினர்களின் ஒழுக்கம், கட்டுக்கோப்புதான் நாட்டை பாதுகாப்பாக வைத்து இருக்கிறது. பாம்பிடம் இருக்கும் விஷம் என்பது எதிரிகளிடம் இருந்தும், தன்னை தாக்க வருபவர்களிடம் இருந்தும் தன்னை பாதுகாத்துக்கொள்ளும் ஆயுதமாகும். அதேபோலவே, மிகப்பெரிய மனிதர்கள் என்பவர்கள் யாரையும் தாக்குபவர்கள் என்று அர்த்தம் அல்ல.

பாராட்டு

ஒருவர் தாக்க வரும்போது, அவரிடம் இருந்து தங்களை தற்காத்துக்கொள்வது எப்படி என்பதை சொல்லிக்கொடுப்பதையும், உடல் வலிமையை அதிகப்படுத்துவதையும் கற்றுக்கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நான் பாராட்டுகிறேன். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் உடல் வலிமையை அதிகப்படுத்தும் பயிற்சி என்பது, நாட்டை பாதுகாக்கவும், தாக்குதல்களில் இருந்து சமூகத்தை பாதுகாக்கவும் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

பாதுகாப்புக்கு காரணம்?

நாட்டில் ஏன் மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்? என என்னைக் கேட்டால், நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் இருப்பதாலும், ஜனநாயகம் இருப்பதாலும், ராணுவப் படைகள் இருப்பதாலும் மட்டுமல்ல, 4-வதாகஆர்.எஸ்.எஸ். அமைப்பு இருப்பதாலும் பாதுகாப்பாக இருக்கிறது என்று கூறுவேன்.

அவசரநிலைக்கு எதிர்ப்பு

என்னைப் பொருத்தவரை, நாட்டில் அவசரநிலை கொண்டுவரப்பட்ட போது, அதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தீவிரமாகச் செயல்பட்டனர். அவசரநிலைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர் வலிமையாகவும், கட்டுக்கோப்பாகவும் செயல்பட்டது, பிரதமராக இருந்த இந்திரா காந்தியை சென்றடைந்தது. இதைப் புரிந்து கொண்ட அவர் அவசரநிலையை நீண்ட காலத்துக்கு கொண்டு செல்ல முடியாது என்பதை அறிந்தார்.

மதச்சார்பின்மை என்றால் என்ன?

மதச்சார்பின்மை என்ற விஷயம் மதத்தில் இருந்து விலக்கி வைக்க கூடாது. அரசியலமைப்புச் சட்டம் என்பது மதச்சார்பின்மை குறித்து விளக்கவில்லை. சிறுபான்மையினர் தங்களை பாதுகாக்க மதச்சார்பின்மையை பயன்படுத்துகிறார்கள். ஆனால், மதச்சார்பின்மையின் கருத்துரு என்பது, அதைக் காட்டிலும் அதிகமாகும். ஒவ்வொரு தனிமனிதரின் மரியாதையும் காக்கப்பட வேண்டும். ஒரு மனிதரின் மரியாதை, மான்பை, அவரின் செயல்பாடுகள், தாக்கம், பாகுபாடற்ற நிலைக்கு அப்பாற்பட்டு பார்க்க வேண்டும். 

மதச்சார்பின்மைதான் மதத்தை பாதுகாக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவில், இந்து என்ற வார்த்தை மதத்தை குறிக்கிறது, ஆனால், கலாச்சாரத்துக்கான மாற்றாக கருத வேண்டும். அந்த வகையில்தான் இந்துஸ்தான் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் தனி ஆணையம்

அரசியலமைப்புச் சட்டத்தில் மதத்துக்கு 5-வது இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அடிப்படை உரிமைகளில் மதம் என்பது, தனிநபரின் அடிப்படை உரிமைகளுக்குள் கீழே வரும். இந்தியாவில் மட்டுமே சிறுபான்மையினர்களுக்கு தனியாக ஆணையம் இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையினர் என்ற பிரிவை குறிப்பிடவில்லை. ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை சிறுபான்மையினர் என்பது மத நம்பிக்கை அடிப்படையிலும், மக்கள் தொகை அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது. பெரும்பான்மை சமூகத்திடம் இல்லாத உரிமையை, கேட்டுப் பெறும்போதுதான் சிறுபான்மையினர் பாதுகாப்பின்மை உள்ளவர்களாக கருதுகிறார்கள். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!