இப்டியே பண்ணிட்டு இருந்தா எப்படி..? தேடப்படும் குற்றவாளியானார் மல்லையா...! டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு...! 

First Published Jan 4, 2018, 4:30 PM IST
Highlights
mallaiya is a searching accused by delhi court


அந்நிய செலாவனி மோசடி வழக்கில் சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் மல்லையா தேடப்படும் குற்றவாளி என டெல்லி  பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் வாங்கிய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாடு தப்பிச்சென்றார். 

பின்னர், அவர் மீது இந்தியாவின் பல்வேறு  நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் அவை அனைத்தும் நிலுவையில் உள்ளன. 

வெளிநாடு தப்பி சென்ற விஜய் மல்லையா தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு இங்கிலாந்து அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. 

அதன்படி அவரை ஸ்காட்லாந்து போலீசார் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.  

இதனிடையே அந்நிய செலாவனி மோசடி வழக்கில் ஈடுபட்டதாக மல்லையா மீது அமலாக்கத்துறை இயக்குநகரம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இதுகுறித்து ஆஜராகுமாறு மல்லையாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் மல்லையா ஆஜராகவில்லை. 

இந்நிலையில், அந்நிய செலாவனி மோசடி வழக்கில் சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் மல்லையா தேடப்படும் குற்றவாளி என டெல்லி  பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


 

click me!