ashok gehlot: அசோக் கெலாட்டின் அரசியல் கேம்! ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை முதல்வராக்க எம்எல்ஏக்கள் போர்க்கொடி

By Pothy Raj  |  First Published Sep 26, 2022, 9:33 AM IST

ராஜஸ்தானில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு  போட்டியிட இருப்பதால், அடுத்த முதல்வராக சச்சின் பைலட்டை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் பேசி வருகிறது. இதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்புத் தெரிவித்து ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.


ராஜஸ்தானில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு  போட்டியிட இருப்பதால், அடுத்த முதல்வராக சச்சின் பைலட்டை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் பேசி வருகிறது. இதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்புத் தெரிவித்து ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

எம்எல்ஏக்கள் அனைவரும், தாங்கள் யாருக்கு முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என விரும்புகிறோமோ அவர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று காங்கிரஸ் மேலிடத்துக்கு போர்க்கொடி தூக்கியுள்ளனர்

Tap to resize

Latest Videos

சச்சின் பைலட்டும், அசோக் கெலாட்டும் அரசியலில் எதிரும்,புதிருமாக இருப்பவர்கள். இதனால் சச்சின் பைலட் முதல்வராகவிடாமல் அசோக் கெலாட் அரசியல் காய்களை நகர்த்துகிறாரா என்ற சந்தேகமும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பில்கிஸ் பானு குடும்பத்தினரை சந்திப்பீர்களா..? ஆர்ஆர்எஸ் தலைவர் பகவத் மசூதி விசிட்.. காங்கிரஸ் பதிலடி..

ஏறக்குறைய 90க்கும் அதிகமான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று இரவு சபாநாயகர் சி.பி.ஜோஷி இல்லத்துக்கச் சென்று ராஜினாமா செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளனர். முன்னதாக அமைச்சர் சாந்தி தாரிவாலுடன் நீண்ட ஆலோசனை நடத்திவிட்டு இந்த முடிவை எடுத்துள்ளனர்.

ஆனால் எம்எல்ஏக்களை கட்டுப்படுத்த வேண்டிய அசோல் கெலாட், எம்எல்ஏக்கள் கோபமாக உள்ளனர், அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என கைவிரித்துள்ளார்.

இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசலைத் தீர்க்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, அஜெய் மகான் ஆகியோர் ராஜஸ்தானுக்கு நேற்று இரவு விரைந்தனர்.இன்று அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்களுடன் கார்கே, மகான் ஆகியோர் பேச்சு நடத்த உள்ளனர்.

அமைச்சர்கள் சாந்தி தாரிவால், பிரதாப் சிங் கச்சாரியாவாஸ், மகேஷ் ஜோஷி, கெலாட் ஆலோசகர் சன்யம் லோதா ஆகியோர் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, அஜெய் மகான் இருவரையும் நள்ளிரவில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்தியா மாபெரும் சாதனை.!! குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்த இந்தியா.. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

அமைச்சர் கோவிந்த் ராம் மேக்வால் கூறுகையில் “ ராஜஸ்தான் முதல்வராக அடுத்துயாரைத் தேர்ந்தெடுப்பது என்பது, காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிந்தபின்புதான் முடிவு எடுக்க வேண்டும். அதுவரை எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்களிடம் தெரிவித்துள்ளோம். ராஜஸ்தான் முதல்வராக யாரை நியமிக்க வேண்டும் என்பதை அசோக் கெலாட் தேர்வு செய்வார். கட்சி மேலிடம் பிறப்பிக்கும் உத்தரவை ஏற்போம்” எனத் தெரிவித்தார்.

அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் கடந்த 2018ம் ஆண்டிலிருந்தே மோதல் இருந்து வந்தது. ஒருகட்டத்தில் சச்சின் பைலட் கட்சியை விட்டு விலக முடிவு செய்தபோது,ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி முயற்சியால் அதைக் கைவிட்டார். இருப்பினும் மாநிலத்தில் சச்சின் பைலட், கெலாட் ஆதரவாளர்கள் என்று தனித்தனியே செயல்பட்டு வருகிறார்கள்.

”என் கையில் எதுவும் இல்லை; எம்.எல்.ஏக்கள் கோவமாக உள்ளனர்… அசோக் கெலாட் அதிரடி!!

இதற்கிடையே 2020ம் ஆண்டு ஜூலையில் சச்சின் பைலட் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் திடீரென முதல்வர் கெலாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். இதனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது, பின்னர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தலையிட்டதால் சச்சின் பைலட் அமைதியானார். 


இந்நிலையில் தனக்குப் பிடிக்காத சச்சின் பைலட் முதல்வராக வருவதை அசோக் கெலாட் விரும்பமாட்டார். ஆனால், காங்கிரஸ் மேலிடமோ சச்சின் பைலட்டை முதல்வராக்க விரும்புகிறது. இதனால் எம்எல்ஏக்களை தூண்டிவிட்டு, சச்சின் பைலட்டுக்கு எதிராக கெலாட் காய் நகர்த்துகிறாரா என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது
 

click me!