தலைமை வழக்கறிஞர் பதவி வேண்டாம்.. உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி அதிரடி !

By Narendran S  |  First Published Sep 25, 2022, 10:44 PM IST

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக செயல்பட உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மறுத்து விட்டார்.


மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக செயல்பட உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மறுத்து விட்டார். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் - அட்டர்னி ஜெனரல் பதவி என்பது அரசியல் சாசன பதவியாகும். இப்பதவியில் 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை இருந்தவர் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆவார். இவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு முதல் போலி என்கவுண்ட்டர்கள் வழக்கு வரை இந்தியாவின் முக்கிய வழக்குகளில் இவரின் பங்கு மிக முக்கியமானதாகும்.

இதையும் படிங்க: பெட்ரோல் குண்டு வீச்சு - தமிழக அரசிடம் அறிக்கை கேட்ட மத்திய அரசு !

Tap to resize

Latest Videos

இவர் 2017 ஆம் ஆண்டு தமது பதவியை முகுல் ரோத்தகி ராஜினாமா செய்தார். இந்திய நாட்டின் 15வது அட்டர்னி ஜெனரலாக 2017-ம் ஆண்டு ஜூலை 1-ல் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் பொறுப்பேற்றார். அவரது 3 ஆண்டுகால பதவிக் காலம் 2020-ம் ஆண்டு முடிவடைந்தது. அப்போது 91 வயதான தம்மை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கே.கே வேணுகோபால் கேட்டுக் கொண்டார். மத்திய அரசு அவருக்கு மேலும் பணி நீட்டிப்பு வழங்கியது.

இதையும் படிங்க: பில்கிஸ் பானு குடும்பத்தினரை சந்திப்பீர்களா..? ஆர்ஆர்எஸ் தலைவர் பகவத் மசூதி விசிட்.. காங்கிரஸ் பதிலடி..

இருந்தபோதும் 2022-ம் ஆண்டு வரைதான் தாம் பணியில் இருப்பேன் எனவும் அப்போது கே.கே.வேணுகோபால் நிபந்தனை விதித்து பணி நீட்டிப்பை ஒப்புக் கொண்டார். தற்போது கே.கே.வேணுகோபாலின் பணி காலம் வரும் 30-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக மீண்டும் முகுல் ரோத்தகி நியமிக்கப்பட உள்ளதாக டெல்லி தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தலைமை வழக்கறிஞராக செயல்பட உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மறுப்பு தெரிவித்துள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

click me!