ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மசூதி மற்றும் மதராசா பள்ளி செல்வதற்கு பதிலாக, படுகொலை செய்யப்பட்ட பில்கிஸ் பானு மற்றும் முகமது அக்லக் குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மசூதி மற்றும் மதராசா பள்ளி செல்வதற்கு பதிலாக, படுகொலை செய்யப்பட்ட பில்கிஸ் பானு மற்றும் முகமது அக்லக் குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் ஆர்எஸ்எஸ் தலைவர் பகவத் மசூதி சென்ற சம்பவம், எம்.பி ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ நடைபயணம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை காட்டுகிறது என்று காங்கிரஸ் எம்.பி திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:இந்தியா மாபெரும் சாதனை.!! குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்த இந்தியா.. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்
மேலும் அவர், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை பெறுவேண்டுமாயின், பகவத் முதலில் குஜராத் கலவரத்தின் போது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட கர்ப்பிணி பெண் பில்கிஸ் பானு மற்றும் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்ட முகமது அக்லக் ஆகியோர் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்று காட்டமாக கூறினார்.ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மீதான கைது நடவடிக்கை குறித்து கேட்கபட்ட கேள்விக்கு, பிஎப்ஐ மீது மட்டுமின்றி, நாட்டில் மதம் குறித்து வெறுப்புகளை பரப்பும் அமைப்புகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க:aiims in madurai :மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 'ஆப்ரேஷனே' நடக்குதுனுகூட சொல்லுங்க? ப.சிதம்பரம் கிண்டல்
சில தினங்களுக்கு டெல்லியில் உள்ள மசூதி மற்றும் முஸ்லிம் மாணவர்கள் படிக்கும் மதராசா பள்ளிக்கு சென்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பார்வையிட்டார். மேலும் அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவரை சந்தித்து பேசினார். பின்னர் இரு தலைவர்களும், மதம் மற்றும் வழிபாட்டு முறைகளாலும் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் ஒரே டி.என்.ஏ என்று கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.